பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர் அகற்றுவதில் எம்.எல்.ஏ., பாரபட்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர் அகற்றுவதில் எம்.எல்.ஏ., பாரபட்சம்

Added : ஜூலை 20, 2021
Share
குளித்தலை: பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர் அகற்றுவதில், தி.மு.க.,- எம்.எல்.ஏ., பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில், குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்களை, தி.மு.க.,வினர் ஒட்டினர். நேற்று முன்தினம் பள்ளி சுவற்றில் ஒட்டிய போஸ்டர்களை அகற்றிட, எம்.எல்.ஏ., மாணிக்கம்

குளித்தலை: பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர் அகற்றுவதில், தி.மு.க.,- எம்.எல்.ஏ., பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில், குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்களை, தி.மு.க.,வினர் ஒட்டினர். நேற்று முன்தினம் பள்ளி சுவற்றில் ஒட்டிய போஸ்டர்களை அகற்றிட, எம்.எல்.ஏ., மாணிக்கம் உத்தரவிட்டார். இதையடுத்து, போஸ்டர்கள் அகற்றப்பட்டன. ஆனால், அருகில் உள்ள தாலுகா அலுவலக வளாகம், நீதிமன்ற வளாகம், கடம்பர்கோவில் யூனியன் நடுநிலைப்பள்ளி சுவற்றில் ஒட்டிய வாழ்த்து போஸ்டர்கள் கிழக்கப்படவில்லை. மேலும் நிழற்கூடம், நெடுஞ்சாலை பாலம், யூனியன் நடுநிலைப்பள்ளிகளில் பிறந்தநாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களையும் அகற்றிட, தி.மு.க.,வினருக்கு எம்.எல்.ஏ., மாணிக்கம் உத்தரவிட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X