அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளை ஆன்லைனில் விற்க நடவடிக்கை: அமைச்சர் காந்தி

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சேலம்: தமிழக கதர் துறை அமைச்சர் காந்தி சேலம் மாவட்டத்தில் உள்ள காதி கிராப்ட் மற்றும் சேலம் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்பு செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் பொறுப்பேற்ற உடன் கொரோனா பணிகளில் சிறப்பாக செயல்பட்டார். அதன் பின்பு தற்போது துறை ரீதியான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். 15 கோடி விற்பனை
கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளை ஆன்லைனில் விற்க நடவடிக்கை: அமைச்சர் காந்தி

சேலம்: தமிழக கதர் துறை அமைச்சர் காந்தி சேலம் மாவட்டத்தில் உள்ள காதி கிராப்ட் மற்றும் சேலம் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்பு செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் பொறுப்பேற்ற உடன் கொரோனா பணிகளில் சிறப்பாக செயல்பட்டார். அதன் பின்பு தற்போது துறை ரீதியான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். 15 கோடி விற்பனை நடக்கும் கதர் துறையில், கொரோனாக்கு பின்பு விற்பனை குறைந்துள்ளது. இதனை உயர்த்த மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விற்பனை மற்றும் பராமரிப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆர்கானிக் துணிகளை ரெடிமேடாக தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியதால், பட்டு விலை உயர்ந்துள்ளது. அரசின் செயல்பாட்டால் இதனை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் நிதி நெருக்கடியை சமாளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஜவுளிபூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். நெசவாளர் சங்கம் பல செயல்படாமல் உள்ளது. செயல்படும் சங்கங்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்கும். போலியான சங்கங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கோ-ஆப்டெக்ஸ் நிறுவன ஆடைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கைத்தறித் துறை செயலாளர் பியூலா ராஜேஷ், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-ஜூலை-202114:52:53 IST Report Abuse
Girija இதில் அமைச்சர் யார் ? புடவையை இழுத்து பிடிப்பவர் யார் ? புடவையை பார்வையிடும் போஸ் கொடுக்கும் பெண்மணி யார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X