பொது செய்தி

தமிழ்நாடு

தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடலோர அமலாக்க பிரிவு, மீனவளத்துறை மற்றும் கடலோர காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.கடந்த மூன்று நாட்களாக சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும் அதனை மறுக்கும் பட்சத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983ல் உள்ள விதிகளை அமல்படுத்த கோரியும் தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் மீனவ கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடலோர அமலாக்க பிரிவு, மீனவளத்துறை மற்றும் கடலோர காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த மூன்று நாட்களாக சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும் அதனை மறுக்கும் பட்சத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983ல் உள்ள விதிகளை அமல்படுத்த கோரியும் தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் மீனவ கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், அப்பகுதி மக்கள் குடியுரிமை அடையாளங்களான ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்டவைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ‛சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது. அதே நேரம் 1983ம் ஆண்டு மீன்பிடி சட்டம் முழுமையாக அமல்படுத்தபடும். விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என கலெக்டர் உறுதியளித்தார். அதன்படி தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் படகுகள், படகு இஞ்சின் திறன் மற்றும் வலைகள் குறித்த ஆய்வு நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X