பொது செய்தி

தமிழ்நாடு

5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வாய்ப்பு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைபெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியசரன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றும் (ஜூலை 20) நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு
Rain, Weather Report, Coimbatore, மழை, வானிலை,

சென்னை: ‛‛தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைபெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியசரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றும் (ஜூலை 20) நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழல் (திருவள்ளூர்), அம்பத்துார் (திருவள்ளூர்) தலா 4 செ.மீ., பெரம்பூர் (சென்னை) 3 செ.மீ., வால்பாறை (கோவை), சென்னை நுங்கம்பாக்கம், தேவலா (நீலகிரி) தலா 2 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வடமேற்கு வங்க கடல் பகுதியில் வரும் ஜூலை 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.


வங்க கடல் பகுதிகள்:


இன்று (ஜூலை 20): தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளை முதல் ஜூலை 24ம் தேதி வரை: தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று முதல் ஜூலை 24ம் தேதி வரை: தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


latest tamil news





அரபிக்கடல் பகுதிகள்:


இன்று முதல் ஜூலை 24ம் தேதி வரை: கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று முதல் ஜூலை 24ம் தேதி வரை: தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X