மக்கள் உத்தரவை ஏற்காத காங்.,: பிரதமர் மோடி தாக்கு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: ''அதிகாரத்தில் இருப்பது தங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் கருதி, மக்கள் அளித்த உத்தரவை காங்கிரஸ் கட்சி ஏற்று கொள்ள மறுக்கிறது'', என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.டில்லியில் பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் இருப்பதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. அசாம், மே.வங்கம் மற்றும் கேரளாவில் தோல்வியடைந்ததை
congress, BJP, PmModi, narendramodi, காங்கிரஸ், பிரதமர் மோடி, நரேந்திர மோடி

புதுடில்லி: ''அதிகாரத்தில் இருப்பது தங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் கருதி, மக்கள் அளித்த உத்தரவை காங்கிரஸ் கட்சி ஏற்று கொள்ள மறுக்கிறது'', என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டில்லியில் பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் இருப்பதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. அசாம், மே.வங்கம் மற்றும் கேரளாவில் தோல்வியடைந்ததை அக்கட்சியால் ஏற்று கொள்ள முடியவில்லை. அக்கட்சியின் நடவடிக்கைகள் பொறுப்பற்றது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. மத்திய அரசின் பணிகளை, பா.ஜ., எம்.பி.,க்கள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அப்போது, எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்க முடியும். காங்கிரஸ், தனது எதிர்க்கட்சி பணியை சரியாக செய்யவில்லை.

இந்தியாவை, கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த எண்ணத்திலேயே காங்கிரஸ் உள்ளது. இதனால், மக்கள் நம்மை தேர்வு செய்ததை அக்கட்சியால் ஏற்று கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சியாக, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை அக்கட்சி கடுமையாக எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லாத போது, வேண்டுமென்றே இந்தியாவில் எதிர்மறையான சூழலை உருவாக்குகிறது.


latest tamil news


அதிகாரத்தில் இருப்பது தங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என காங்கிரஸ் நினைக்கிறது. இதனால், மக்கள் அளித்த உத்தரவை அக்கட்சி ஏற்கவில்லை. எல்லா மாநிலங்களிலும் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ், நம்மை பற்றி கவலைப்படுகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami Sampath - mumbai,இந்தியா
21-ஜூலை-202118:29:31 IST Report Abuse
Ramaswami Sampath காங்கிரஸ் கட்சியை குற்றம் சொல்லியே ஏழு வருஷம் ஒட்டியாயிற்று. பார்லிமென்டில் எதிர் கட்சிகளின் கேள்விகளுக்கு சரியான பதில் தருவது இல்லை.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜூலை-202101:36:24 IST Report Abuse
தமிழவேல் திடீர்னு என்னாச்சு ? எதை வச்சி இப்புடி சொல்றாருன்னு விபரம் இல்லியே ?
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் அதிகாரத்தில் இருப்பது தங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என BJP (காங்கிரஸ் அல்ல) நினைக்கிறது. இதனால், தமிழ்நாட்டு மக்கள் அளித்த உத்தரவை அக்கட்சி ஏற்கவில்லை. - கச்சிதமா பொருந்துதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X