பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரில் ரூ.1.3 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவில் பகுதியில், 2,610 சதுர அடி நிலத்தை, 30 ஆண்டுகளுக்கு மேலாக முத்து என்பவர் குத்தகைக்கு எடுத்து வாடகை செலுத்தி வந்தார். ஐந்தாண்டுகளாக 8.18 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தாமல் இருந்து வந்ததால், அவர் மீது, சேலம் இணை கமிஷனர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்து அந்த இடத்தை மீட்டு கம்பி வேலி
ஆத்தூரில் ரூ.1.3 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவில் பகுதியில், 2,610 சதுர அடி நிலத்தை, 30 ஆண்டுகளுக்கு மேலாக முத்து என்பவர் குத்தகைக்கு எடுத்து வாடகை செலுத்தி வந்தார். ஐந்தாண்டுகளாக 8.18 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தாமல் இருந்து வந்ததால், அவர் மீது, சேலம் இணை கமிஷனர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்து அந்த இடத்தை மீட்டு கம்பி வேலி அமைக்கும்படி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் பேரில் இன்று, சேலம் உதவி கமிஷனர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர் சோழமாதேவி, தக்கார் சுரேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை மீட்டு அப்பகுதியில் கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த இடத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்று பேனர் வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X