அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை: தமிழக நடிகையும், பா.ஜ., நிர்வாகியுமான குஷ்புவின் டுவிட்டர் கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, பதிவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை குஷ்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு, அங்கு தோல்வியை
 நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசை

சென்னை: தமிழக நடிகையும், பா.ஜ., நிர்வாகியுமான குஷ்புவின் டுவிட்டர் கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, பதிவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை குஷ்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு, அங்கு தோல்வியை தழுவினார். இவ்வாறு அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட குஷ்பு, டுவிட்டரில் ஆக்டிவாக இயங்கி வந்தார். குஷ்புவை டுவிட்டர் பக்கத்தை 13 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில், நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அதில், அவர் பதிவிட்டிருந்த அனைத்துப் பதிவுகளும் ஹேக்கர்களால் அழிக்கப்பட்டுள்ளது. அவரின் டுவிட்டர் பக்கத்தின் பெயர் khushsundar என்பதற்கு பதிலாக briann என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடிகை குஷ்பு தரப்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனது டுவிட்டர் கணக்கு முடக்கம் தொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மூன்று நாட்களுக்கு முன் என்னுடைய டுவிட்டர் ஐடி ஹேக் செய்யப்பட்டு விட்டது. இது தொடர்பாக டுவிட்டர் நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். கடந்த சில நாட்களால் என்னுடைய டுவிட்டர் கணக்கில் பதியப்படும் பதிவுகள் என்னுடையது அல்ல. இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X