மணிப்பூர் மாநில காங்., தலைவர் திடீர் ராஜினாமா; 8 எம்எல்ஏ.,க்கள் பா.ஜ., சேர திட்டம்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
இம்பால்: மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்தாஸ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு பா.ஜ.வில் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியில் இருக்கிறது. இதனால்
Manipur, Congress President, Resigns, Party MLAs, Join, BJP, மணிப்பூர், காங்கிரஸ், தலைவர், ராஜினாமா, பாஜக,

இம்பால்: மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்தாஸ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு பா.ஜ.வில் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியில் இருக்கிறது. இதனால் ஆட்சியை தக்க வைப்பதில் பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல், காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப்பில் ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. இதனால், மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா நியமனம் செய்தார்.


latest tamil news


இந்நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் பா.ஜ., 21 இடங்களிலும் வென்றது. அதிக இடங்களில் வென்ற காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. ஆனால், மாநில கட்சிகளான என்.பி.எப், என்.பி.பி. ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது. இதன்பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து பா.ஜ.,வில் இணைந்தனர்.

தற்போது மணிப்பூர் சட்டசபையில் பா.ஜ.,வுக்கு 25 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். இதனிடையே அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தாஸ் தமது பதவியை இன்று (ஜூலை 20) ராஜினாமா செய்தார். அத்துடன் மேலும் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இன்று கூண்டோடு பா.ஜ.,வில் ஐக்கியமாக உள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூலை-202102:36:13 IST Report Abuse
s.sivarajan அதிகாரம் கையிலிருக்கும் பொது இதெல்லாம் ரொம்ப சாதாரணம்
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
20-ஜூலை-202122:14:25 IST Report Abuse
S Ramkumar ப ஜா காவை தோற்கடிப்து தான் காங்கிரசின் லட்சியம். தன்னுடைய கூடாரம் காலியானால் கூட ஜெயிப்பதை பற்றி நினைக்க மாட்டோம். மதவாதத்தை நுழையவிட மாட்டோம் என்று சாதிவெறி, சிறுபான்மை வெறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து கழுத்தை தேய்ந்து காட்டெரும்பு ஆனதை போன்று இன்று காங்கிரஸ் நிலைமை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பத்தி நாலு நூறாகலாம். அனால் ஆட்சி அமைக்க அடுத்த மாநிலங்கள் காட்சிகளையே நம்பி இருக்க வேண்டி இருக்கும். வேறு கட்சி பிரதமரை கூட ஆதரிக்க வேண்டி வரலாம்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-ஜூலை-202119:50:00 IST Report Abuse
elakkumanan தலை யாருன்னே சொல்ல முடியாத, கண்டுபிடிக்க கூட முடியாத அளவு பெரிய மொக்கை கட்சி கான் கிராஸ்...........மோடி அவர்கள் மட்டும் இல்லையென்றால், இந்தியாவின் நிலையும் கூட இதுபோல, கேவலமாகத்தான் இருந்திருக்கும்..... பக்கத்து நாட்டை பாருங்க.....வெளிநாட்டு விசாரணை எல்லாம் நடக்குது..........தலைவன் எவ்வழி, தேசம் அவ்வழி....கட்சி அவ்வழி...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X