திருச்சூர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு ‛கோவிட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருச்சூர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு ‛கோவிட்'

Added : ஜூலை 20, 2021
Share
திருவனந்தபுரம்: திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் 60 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சக மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.நாடு முழுவதும் கோவிட் கட்டுக்குள் வந்த நிலையில் கேரளாவில் இன்னும் பாதிப்பு குறையவில்லை. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி

திருவனந்தபுரம்: திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் 60 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சக மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நாடு முழுவதும் கோவிட் கட்டுக்குள் வந்த நிலையில் கேரளாவில் இன்னும் பாதிப்பு குறையவில்லை. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மருத்துவ மாணவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த மாணவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் கோவிட் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் 60 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதில், எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 50 பேரும், முதுகலை வகுப்பில் படிக்கும் 10 மாணவர்களும் அடங்குவர். முதுகலை மாணவர்கள் 10 பேரும் மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் பயிற்சி மருத்துவர்களாக உள்ளனர். 39 மருத்துவ மாணவர்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு மீண்டும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மருத்துவ நிபுணர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 60 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து எம்.பி.பி.எஸ். மற்றும் முதுகலை மருத்துவ வகுப்புகளை ரத்து செய்து திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X