பெகாசஸ்; அனைத்து மாநிலங்களிலும் 'பிரஸ்மீட்', கவர்னர் மாளிகை முற்றுகை - காங்., அறிவிப்பு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக அனைத்து மாநிலத்திலும் நாளை (ஜூலை 21) பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றும், வரும் 22-ம் தேதி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முன், அடையாளப் போராட்டமும் நடத்தப்படும்,'' என காங்கிரஸ் அறிவித்துள்ளது.இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் 40
Pegasus, Congress, Press Conference, Every State, Governor House, பெகாசஸ் ஸ்பைவேர், காங்கிரஸ், பத்திரிகையாளர் சந்திப்பு, கவர்னர் மாளிகை, முற்றுகை, போராட்டம்

புதுடில்லி: ‛‛பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக அனைத்து மாநிலத்திலும் நாளை (ஜூலை 21) பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றும், வரும் 22-ம் தேதி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முன், அடையாளப் போராட்டமும் நடத்தப்படும்,'' என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news


பார்லி.,யின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாகவும், எந்தெந்த தலைவர்களைக் குறிவைத்து ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (ஜூலை 21) ஒவ்வொரு மாநிலத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தப்படும்.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி வரும் 22ம் தேதி அனைத்து மாநிலத்தின் கவர்னர் மாளிகை முன்பும், காங்கிரஸ் கட்சி சார்பில் அடையாளப் போராட்டம் நடத்தப்படும். பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சமீபத்திய தகவலின்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் செல்போன், அவரின் அலுவலக ஊழியர்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்தபோது, இந்த பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
20-ஜூலை-202121:25:04 IST Report Abuse
Narayanan Muthu கேவலமான பிழைப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம். பொய் பித்தலாட்டம் திருட்டுத்தனம் இதுவே பிஜேபியின் தாரக மந்திரம்
Rate this:
21-ஜூலை-202105:55:00 IST Report Abuse
ராஜாபோன் ஓட்டுகேட்கப்பட்டதுக்கு ஆதாரம் எங்கண்ணே?! பொய் பேசுபவர் காது ரெண்டையும் அறுக்க வேண்டும் என்பது சித்தர் வாக்கு......
Rate this:
Cancel
20-ஜூலை-202121:24:46 IST Report Abuse
Nachi Natural pk soon escape to overseas 😳😳😳
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
20-ஜூலை-202121:23:20 IST Report Abuse
Narayanan Muthu கையாலாகாத அரசின் பேடித்தனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X