அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது: அமைச்சர் ராமசந்திரன்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை: "திமுக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது, அதிமுக அரசு தவறு செய்ததால் தான் மக்கள் திமுகவை தேர்வு செய்து உள்ளனர், அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது" என மதுரையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறியுள்ளார்.மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடன் வருவாய் பேரிடர்
அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது: அமைச்சர் ராமசந்திரன்

மதுரை: "திமுக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது, அதிமுக அரசு தவறு செய்ததால் தான் மக்கள் திமுகவை தேர்வு செய்து உள்ளனர், அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது" என மதுரையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடன் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கலெக்டர் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக 14,75,522 மதிப்பிலான முதல்வர் நிவாரண நிதி, இலவச வீட்டு மனை பட்டா, இலவச தையல் இயந்திரம் ஆகியவைகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள், பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிறைய பயனாளிகளை சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


latest tamil news


முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் மனுக்களை தள்ளுபடி செய்யாமல் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு, வாரம் ஒரு முறை பட்டா மாறுதல் சம்பந்தமாக அதிகாரிகள் இடத்தை நேரில் ஆய்வு செய்ய உத்தரவு, ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை உடனடியாக மீட்க உத்தரவு, நில எடுப்பு விவகாரத்தில் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப விரைவில் அறிவிப்பு, மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் உத்தரவில் முதல்வர் ஓரிரு நாட்களில் கையெழுத்துதிடுவார்.

அதன் பின்னர் நில எடுப்பு பணிகள் விரைந்து நடத்தப்படும். திமுக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது. அதிமுக அரசு தவறு செய்ததால் தான் மக்கள் திமுக.,வை தேர்வு செய்து உள்ளனர், அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-202117:06:16 IST Report Abuse
கணபதி யாரும் கண்டு பிடிக்க முடியாத அளவில் புதிய தவறுகள் செய்வோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X