இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: இந்தியாவில் கோவிட் 2-ம் அலை பாதிப்பு மோசமாக இருந்ததால் அமெரிக்கர்கள் இங்கு பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தியிருந்த அமெரிக்கா, தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால் நிலைமையை மறுபரிசீலித்துவிட்டு பயணிக்கலாம் என கூறியுள்ளது.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், பயணங்கள் குறித்த சுகாதார அறிவிப்புகளை முடிவு செய்கிறது. அதன் படி இந்தியாவை மே
இந்தியா, பயண கட்டுப்பாடு, அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியாவில் கோவிட் 2-ம் அலை பாதிப்பு மோசமாக இருந்ததால் அமெரிக்கர்கள் இங்கு பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தியிருந்த அமெரிக்கா, தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால் நிலைமையை மறுபரிசீலித்துவிட்டு பயணிக்கலாம் என கூறியுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், பயணங்கள் குறித்த சுகாதார அறிவிப்புகளை முடிவு செய்கிறது. அதன் படி இந்தியாவை மே மாதம் 4-ம் நிலைக்கு மாற்றியிருந்தது. அப்படி என்றால் அந்நாட்டிற்கு பயணம் செய்யக்கூடாது என்று அர்த்தம். அச்சமயத்தில் இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்துக்கும் மேல் பதிவானது. ஆக்சிஜன் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு நிலவியது.

தற்போது கோவிட் பாதிப்பில் நான்கு மாதங்களுக்கு பிந்தைய நிலையை இந்தியா அடைந்துள்ளது. 30 ஆயிரமாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. தினசரி இறப்புகள் 400-க்குள் பதிவாகிறது. இந்நிலையில் 4-ம் நிலையிலிருந்து இந்தியாவை 3-ம் நிலைக்கு தளர்த்தியுள்ளது. அதன்படி மறுபரிசீலனை செய்துவிட்டு அமெரிக்கர்கள் பயணிக்கலாம்.


latest tamil news


அதே போல் பாகிஸ்தானுக்கான பயண கட்டுப்பாடுகளை சி.டி.சி., 2-ம் நிலைக்கு தளர்த்தியது. இருப்பினும் உள்துறையானது, பயங்கரவாத அச்சுறுத்தல் கொண்ட நாடு என்பதால் அமெரிக்கர்கள் பயணங்களை மறுபரிசீலிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-ஜூலை-202119:27:23 IST Report Abuse
Ramesh Sargam அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு பயணிப்பதை பற்றி செய்தி வெளியிட்டுள்ளீர்கள். ஆனால், இந்தியாவிலிருந்து இந்தியர்கள் மற்றும் வேறு பல நாட்டினார்கள் அமெரிக்காவிற்கு பயணிக்கலாமா என்று ஏன் கூறவில்லை? அதில் ஏதாவது பிரச்சினையா? அமெரிக்கா இன்னும் இந்தியர்களை அனுமதிப்பதில்லையா...?
Rate this:
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
20-ஜூலை-202117:42:20 IST Report Abuse
B. இராமச்சந்திரன் நம்மை விட பலமடங்கு தொற்று பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவிற்கு நாம் தான் தடைவிதிக்கவேண்டும்...
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-ஜூலை-202119:24:39 IST Report Abuse
Ramesh Sargamகரெக்ட்டா சொன்னீங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X