பொது செய்தி

தமிழ்நாடு

ஒலிம்பிக் தடகள போட்டி : குன்னூர் ராணுவ மைய வீரர்கள் பங்கேற்பு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
குன்னுார் : டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் தடகள போட்டியில் பங்கேற்கின்றனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரை சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற சுபேதார் ஆரோக்கிய ராஜ், 30 மற்றும் நாயக் சுபேதார் இர்பான், 31 ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக தடகள பிரிவில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள்
ஒலிம்பிக், தடகள போட்டி, குன்னூர், ராணுவவீரர்கள், பங்கேற்பு

குன்னுார் : டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் தடகள போட்டியில் பங்கேற்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரை சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற சுபேதார் ஆரோக்கிய ராஜ், 30 மற்றும் நாயக் சுபேதார் இர்பான், 31 ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக தடகள பிரிவில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் கடந்த 6 மாதங்களாக வெலிங்டன் தங்கராஜ் ஸ்டேடியத்தில் ராணுவ விளையாட்டு மையம் சார்பில், பயிற்சியாளர் லெப்., கர்னல் ஹேமந்த் ராஜ் தலைமையில், தடகளத்தில் தீவிர பயிற்சி பெற்றனர்.


latest tamil news


ஜப்பான் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், 400 மீ., தொடர் ஓட்டத்த்தில் ஆரோக்கிய ராஜ் பங்கேற்கிறார். இவர் ஏற்கனவே பல தேசிய போட்டிகளில் தங்க பதக்கங்களும், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.


latest tamil news



ஒலிம்பிக்கில் 20 கி.மீ., தூரம் நடை போட்டியில் பங்கேற்கும் இர்பான், ஏற்கனவே பல்வேறு நடை போட்டியில் 6 தங்கபதக்கங்கள் வென்றவர்.
இவர்களுக்கு பாராட்டு தெரிவித்த எம்.ஆர்.சி., கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங் கூறுகையில், "ராணுவ விளையாட்டு மைய வழிகாட்டுதலின் படி எம்.ஆர்.சி, பயிற்சியாளர்களால் தீவிர பயிற்சி பெற்றுள்ளனர். வீரர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் ஒலிம்பிக்கில் தகுதி பெற்று நாட்டிற்கும், நமது ராணுவத்திற்கும், ரெஜிமென்டிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக சென்றுள்ளனர். இந்த பங்களிப்பு பழமைவாய்ந்த ரெஜிமென்டிற்கு பெருமை சேர்த்து மணிமகுடமாக அமைய பெற்றுள்ளது. " என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
20-ஜூலை-202122:35:51 IST Report Abuse
Perumal How come sanghis are not sent.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
20-ஜூலை-202119:38:47 IST Report Abuse
Krishnamurthy Venkatesan Congratulations to both the JCOs. வெற்றியுடன் திரும்ப வாழ்த்துக்கள். is there anybody from MEG & Centre?
Rate this:
Cancel
விசு பாய் , சென்னை வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X