பொது செய்தி

தமிழ்நாடு

தசைநார் சிதைவால் பாதித்த 7 மாத குழந்தை; ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசிபோட்டு சிகிச்சையளிக்க மனு

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ராணிப்பேட்டை: தசைநார் சிதைவால் பாதித்த ஏழு மாத ஆண் குழந்தைக்கு, ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசி போட்டு சிகிச்சையளிக்க உதவும்படி ராணிப்பேட்டை கலெக்டரிடம் தம்பதியினர் மனு கொடுத்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தை சேர்ந்தவர் யுவராஜ், 30. விவசாய கூலித்தொழிலாளி. அவர் மனைவி ரூபா, 25. இவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் மனு அளித்தனர்.
தசைநார் சிதைவு, குழந்தை, ஊசி, சிகிச்சை, மனு

ராணிப்பேட்டை: தசைநார் சிதைவால் பாதித்த ஏழு மாத ஆண் குழந்தைக்கு, ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசி போட்டு சிகிச்சையளிக்க உதவும்படி ராணிப்பேட்டை கலெக்டரிடம் தம்பதியினர் மனு கொடுத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தை சேர்ந்தவர் யுவராஜ், 30. விவசாய கூலித்தொழிலாளி. அவர் மனைவி ரூபா, 25. இவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு சுஜய் என்ற ஏழு மாத ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு திடீரென கை, கால்கள் செயல் இழந்து மூச்சு விடுவதற்கும், சாப்பிடுவதற்கும் சிரமப்பட்டது. இதனால் கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம்.


latest tamil news


அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அரியவகை மரபியல் நோயான முதுகெலும்பு தசை நார் சிதைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதற்கு வெளிநாட்டில் தயாரிக்கப்படும் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள (ZOLGENSMA (AVXS 101) ஊசி மருந்தை இரண்டு வயதுக்குள் செலுத்தி விட்டால் குழந்தையை காப்பாற்றி விடலாம் என டாக்டர்கள் கூறினர். கூலி வேலைக்கு செல்வதால் இந்த தொகையை எங்களால் சம்பாதிக்க முடியாது. எனவே தமிழக முதல்வர், பிரதமர் நிதியுதவி திட்டத்தில் சிகிச்சை அளித்து குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறினார். இவர்கள் குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கலாம்.
தொடர்புக்கு: யுவராஜின் மொபைல் போன் எண் - 99407 22134

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-202100:13:59 IST Report Abuse
பாமரன் அடிக்கடி இந்த நோயால் இந்திய குழந்தைகள் பாதிக்க படுவது அதிகம் ஆகி கொண்டே செல்கிறது. கடந்த மாதம் மட்டும் 4 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்க பட்டு உதவி கோரி இருக்கும் செய்தியை பார்த்த ஞபகம். இதில் என்னவோ சதி இருப்பதாக தோன்றுகிறது. இது எதனால் வருகிறது யேன் அதிகம் ஆகிறது என்று ஆராய்ச்சி செய்ய குழு அமைக்க வேண்டும்
Rate this:
Cancel
Giri V V - குடந்தை,இந்தியா
20-ஜூலை-202120:55:25 IST Report Abuse
Giri V V தந்தை ஏற்படுத்திய ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் பெற்றோர்க்கு பலகோடி, முன் களபணியில் இல்லாத தொற்றில் இறந்த மருத்துவர்க்கு சில கோடி என நிதியை அள்ளி தெளித்தால் வாக்குகள் கிடைக்கும். குழந்தைக்கு வாக்கு கிடையாதே... விழிப்புணர்வு நமக்கு வேண்டும்.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
20-ஜூலை-202118:18:21 IST Report Abuse
Murthy மருத்துவமும் கல்வியின் தனியாரின் கைக்கு சென்றால், மருந்து விலை கோடியில் தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X