பொது செய்தி

இந்தியா

மியான்மர் மக்களுக்கு மிசோரமில் நூறு நாள் திட்ட பணியா? மத்திய அரசு மறுப்பு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவுக்குள் அகதிகளாக நுழைந்துள்ள மியான்மர் மக்களுக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் வழங்க மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளதாக என லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. அதை உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் மறுத்தார்.அண்டை நாடான மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அரசுக்கு எதிராக போராடுபவர்களை சுட்டு வீழ்த்துவது,
மியான்மர், மிசோரம், நூறு நாள் திட்ட பணி, மத்திய அரசு, மறுப்பு

புதுடில்லி: இந்தியாவுக்குள் அகதிகளாக நுழைந்துள்ள மியான்மர் மக்களுக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் வழங்க மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளதாக என லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. அதை உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் மறுத்தார்.

அண்டை நாடான மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அரசுக்கு எதிராக போராடுபவர்களை சுட்டு வீழ்த்துவது, சிறையில் அடைப்பது போன்ற அராஜக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனால் அங்கிருக்க முடியாமல் பலர் தப்பித்து இந்திய எல்லை வழியாக மிசோரம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளனர். 'அவர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் கீழ் பணிகளை வழங்க மிசோரம் அரசு முடிவு செய்துள்ளதா' என்று லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது.


latest tamil news


அதற்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், “சர்வதேச எல்லைகளில் சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பைக் கடைப்பிடிக்க எல்லை பாதுகாப்புப் படை மற்றும் அசாம் ரைபில்ஸ்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மியான்மரில் உள்ள உள்நாட்டு நிலைமை காரணமாக இந்திய - மியான்மர் எல்லை வழியாக அந்நாட்டினர் இந்திய எல்லைக்குள் வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. மிசோரம் அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி அவர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்குவது தொடர்பான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmanan - Chennai,இந்தியா
20-ஜூலை-202118:54:28 IST Report Abuse
Lakshmanan Then he is criticizing other religions.. india is only for indians support Caa NRC
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
20-ஜூலை-202118:10:19 IST Report Abuse
சீனி பர்மாவை ராணுவ ஆட்சியால் பாதிக்கப்பட்ட புத்தமத அகதிகள் நல்ல உழைப்பாளிகள், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் அவர்களை பயன்படுத்தி சாலை, கட்டிட வசதிகளை பெருக்கிகொண்டனர். இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் மக்கள் தொகை குறைந்து வருகிறது மேலும், அவர்கள் நன்கு படித்து வேலை தேடி, இந்தியாவில் உள்ள பெருநகரங்களுக்கு பெயர்ந்துவிட்டனர், எனவே அந்த பகுதியில் வேலைக்கு ஆள் கிடைப்பது கடினம். இந்தியாவும், வடகிழக்கு மாகானங்களின், சாலை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை இந்த அகதிகளுக்கு வேலைகொடுத்து பயன்படுத்துவது தவறு அல்ல, அவர்களுக்கும் உணவு கிடைக்கும், நமக்கும் அடிப்படை வசதி மேம்படும். புத்த மதத்தினர் எந்த பிரச்சனையும் பண்ணுவதில்லை, நேர்மையான உழப்பாளிகள்.
Rate this:
sivan - seyyur,இந்தியா
20-ஜூலை-202120:14:04 IST Report Abuse
sivan புத்த மதத்தினர் பிரச்சீனை செய்வதில்லையா? எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X