மியான்மர் மக்களுக்கு மிசோரமில் நூறு நாள் திட்ட பணியா? மத்திய அரசு மறுப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மியான்மர் மக்களுக்கு மிசோரமில் நூறு நாள் திட்ட பணியா? மத்திய அரசு மறுப்பு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: இந்தியாவுக்குள் அகதிகளாக நுழைந்துள்ள மியான்மர் மக்களுக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் வழங்க மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளதாக என லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. அதை உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் மறுத்தார்.அண்டை நாடான மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அரசுக்கு எதிராக போராடுபவர்களை சுட்டு வீழ்த்துவது,
மியான்மர், மிசோரம், நூறு நாள் திட்ட பணி, மத்திய அரசு, மறுப்பு

புதுடில்லி: இந்தியாவுக்குள் அகதிகளாக நுழைந்துள்ள மியான்மர் மக்களுக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் வழங்க மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளதாக என லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. அதை உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் மறுத்தார்.

அண்டை நாடான மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அரசுக்கு எதிராக போராடுபவர்களை சுட்டு வீழ்த்துவது, சிறையில் அடைப்பது போன்ற அராஜக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனால் அங்கிருக்க முடியாமல் பலர் தப்பித்து இந்திய எல்லை வழியாக மிசோரம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளனர். 'அவர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் கீழ் பணிகளை வழங்க மிசோரம் அரசு முடிவு செய்துள்ளதா' என்று லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது.


latest tamil news


அதற்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், “சர்வதேச எல்லைகளில் சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பைக் கடைப்பிடிக்க எல்லை பாதுகாப்புப் படை மற்றும் அசாம் ரைபில்ஸ்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மியான்மரில் உள்ள உள்நாட்டு நிலைமை காரணமாக இந்திய - மியான்மர் எல்லை வழியாக அந்நாட்டினர் இந்திய எல்லைக்குள் வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. மிசோரம் அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி அவர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்குவது தொடர்பான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X