'அமேசான்' நிறுவனரின் விண்வெளி பயணம் வெற்றி

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வான் ஹார்ன் : 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் அமெரிக்காவில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.'அமேசான்' நிறுவனரும், செயல் தலைவருமான ஜெப் பெசாஸ், 57, பொது மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா திட்டத்துக்காக 'புளூ ஆரிஜின்' என்ற நிறுவனத்தை 2000ல் துவக்கினார். அமெரிக்காவின் முதல் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட வீரரான ஆலன்
விண்வெளி, சீறிப்பாய்ந்தது, ஜெப் பெசாஸ், சுற்றுலா ராக்கெட்


வான் ஹார்ன் : 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் அமெரிக்காவில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

'அமேசான்' நிறுவனரும், செயல் தலைவருமான ஜெப் பெசாஸ், 57, பொது மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா திட்டத்துக்காக 'புளூ ஆரிஜின்' என்ற நிறுவனத்தை 2000ல் துவக்கினார்.


latest tamil news




அமெரிக்காவின் முதல் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட வீரரான ஆலன் ஷெப்பர்டு நினைவாக, 'நியூ ஷெப்பர்டு' என்ற ராக்கெட்டை இந்நிறுவனம் உருவாக்கியது. கடந்த 2015 முதல் இந்த ராக்கெட்டை ஆளின்றி விண்ணில் ஏவி, 15 முறை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

அதன் பின் விண்வெளி சுற்றுலா ராக்கெட்டில் பயணியரை ஏற்றிச் செல்ல, அமெரிக்க அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து அமெரிக்க விண்வெளி வீரர்கள், நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்ததன், 52வது ஆண்டு நினைவு தினத்தன்று, முதல் பயணத்தை மேற்கொள்ள தேதி குறிக்கப்பட்டது.

இந்த பயணத்தில் ஜெப் பெசாஸ் உடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 50, முன்னாள் விமான போக்குவரத்து துறை அதிகாரியான, 82 வயது மூதாட்டி வேலி பங்க், 18 வயது இளைஞரான ஆலிவர் டேமன் ஆகியோர் உடன் சென்றனர்.

மேற்கு டெக்சாசில் இருந்து புறப்பட்ட 'புளூ ஆரிஜின்' ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்து, 106 கி.மீ., மீட்டர் உயரம் சென்றது.

இது, கடந்த வாரம் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட ரிச்சர்டு பிரான்சன் சென்ற உயரத்தை விட, 16 கி.மீ., கூடுதலான துாரம்.

புவி ஈர்ப்பு பாதையை கடந்ததும் ராக்கெட்டில் இணைக்கப்பட்டு இருந்த பயணியர் அமர்ந்திருந்த 'கேப்ஸ்யூல்' எனப்படும் உருண்டை வடிவிலான பகுதி தனியே பிரிந்தது.

அப்போது மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு விண்வெளியில் உடல் எடையற்ற தன்மையை பயணியர் உணர்ந்தனர். பின், ராக்கெட் முதலில் தனியாக தரை இறங்கியது.

அதன் பின் பூமியை நோக்கி வந்த கேப்ஸ்யூலில் இருந்து 'பாராசூட்'கள் விரிந்து பத்திரமாக பாலைவனத்தில் தரை இறங்கியது.


latest tamil news



இந்த மொத்த பயணமுமே, 10 நிமிடங்களில் முடிவடைந்தன. 'புளூ ஆரிஜின்' ராக்கெட் மற்றும் அதில் இணைக்கப்பட்டு இருந்த கேப்ஸ்யூல் ஆகியவை மனித உதவியின்றி தானாகவே இயங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

முதல் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய ஜெப் பெசாஸ், ''இது வாழ்வின் மிக சிறந்த நாள்,'' என, மகிழ்ச்சியை தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
20-ஜூலை-202122:28:19 IST Report Abuse
THINAKAREN KARAMANI நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்ததன், 52வது ஆண்டு நினைவு தினமான இன்று, முதல் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய ஜெப் பெசாஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X