உலகின் அதிவேக ரயில் சீனாவில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பறக்கும்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
பெய்ஜிங்: மின்காந்த விசையை பயன்படுத்தி மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயிலை சீனா இன்று (ஜூலை 20) அறிமுகப்படுத்தியது.மேக்லெவ் ரயில் எனப்படும் அந்த வகை ரயில்களில் இரண்டு ஜோடி காந்தங்கள் பயன்படுத்தப்படும். ஒன்று ரயில் பெட்டியை தண்டவாளத்திற்கு மேல் உயர்த்தும், மற்றொரு காந்தம் அப்படி உயர்ந்து நிற்கும் ரயிலை மின்காந்த விசையால்

பெய்ஜிங்: மின்காந்த விசையை பயன்படுத்தி மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயிலை சீனா இன்று (ஜூலை 20) அறிமுகப்படுத்தியது.



latest tamil news



மேக்லெவ் ரயில் எனப்படும் அந்த வகை ரயில்களில் இரண்டு ஜோடி காந்தங்கள் பயன்படுத்தப்படும். ஒன்று ரயில் பெட்டியை தண்டவாளத்திற்கு மேல் உயர்த்தும், மற்றொரு காந்தம் அப்படி உயர்ந்து நிற்கும் ரயிலை மின்காந்த விசையால் முன்னோக்கி இயக்கும். சுமார் 20 ஆண்டுகளாகவே சீனா இந்த தொழில்நுட்பத்தை குறைந்த தூரங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. ஷாங்காய் விமான நிலையத்திலிருந்து நகரம் வரையிலான 29 கிலோ மீட்டர் தூரத்தை மேக்லெவ் ரயில் இணைக்கிறது. அது தான் உலகிலேயே அதிவேக வணிக ரயிலாகும். சுமார் 400 கி.மீ., என்ற அதிகப்பட்ச வேகத்தில் செல்லும்.

இந்நிலையில் மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய மற்றொரு ரயிலை தயாரித்து தனது சாதனையை தானே முறியடித்துள்ளது. குயிங்டாவ் எனும் நகரில் சீனாவால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட அந்த ரயில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சீன அரசின் தகவல் அலுவலகம் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


latest tamil news



இந்த ரயிலை மாகாணங்களுக்கிடையே பயன்படுத்த ஆய்வு நடந்து வருகிறது. மாகாணங்களை இணைக்கும் வகையில் பயன்பாட்டுக்கு வந்தால் பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய் இடையேயான 1,300 கிலோ மீட்டரை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும். தற்போது விமான பயண நேரம் இவ்விரு நகரங்களுக்கிடையே 3 மணி நேரமாக உள்ளது. பயன்பாட்டில் உள்ள அதிவேக ரயிலில் 5.5 மணி நேரம் ஆகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rupya -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202117:00:38 IST Report Abuse
rupya பிரான்ஸில் வானத்தில் ரப்பரால் ஆன அதிவேக பலூன் வகை ரயில்களை இயக்குகிறார்கள்.அந்த ரயில் இறங்கும் போது அதற்கென உள்ள தண்டவாளத்தில் இறங்கி ஓடுகிறது. ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றிய பின் அதே தண்டவாளத்தில் இருந்து மேலெழுந்து சுமார் 1500 கி.மீ வேகத்தில் பறக்கிறது. அந்த ரயில் தண்டவாளத்திலும் அதே வேகமுடன் ஓடக்கூடியது. சீனனை விட அதிக புத்திசாலிகள் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
rupya -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202117:00:38 IST Report Abuse
rupya பிரான்ஸில் வானத்தில் ரப்பரால் ஆன அதிவேக பலூன் வகை ரயில்களை இயக்குகிறார்கள்.அந்த ரயில் இறங்கும் போது அதற்கென உள்ள தண்டவாளத்தில் இறங்கி ஓடுகிறது. ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றிய பின் அதே தண்டவாளத்தில் இருந்து மேலெழுந்து சுமார் 1500 கி.மீ வேகத்தில் பறக்கிறது. அந்த ரயில் தண்டவாளத்திலும் அதே வேகமுடன் ஓடக்கூடியது. சீனனை விட அதிக புத்திசாலிகள் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
rupya -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202116:42:11 IST Report Abuse
rupya இது ஒன்றும் பெரிய தொழில் நுட்பம் இல்லை. எண்ணெய் பட்ட மொசைக் தரையில் கால் வைத்து வழுக்குவது போல் காந்த இரும்பை சக்கரங்களாக செய்து (உதாரணம் ஒரு சாதா இரும்பு துண்டின் மேல் காந்தம் ஏற்றிய இரும்பு துண்டை வைத்து உரசியபடி வேகமாக தள்ளினால் காந்த இரும்பு சாதா இரும்பை தேய்த்தபடி வழுக்கி ஓடும்.) தண்டவாள இரும்பின் மேல் உந்து விசையில் ஓடவிட்டால் சக்கர காந்த ஈர்ப்பு விசை உந்து சக்தியை பல மடங்கு அதிகமாக்கி ரயில் ஓட்டத்தை தண்டவாளத்தின் மேல் அழுத்தமின்றி மிதந்தபடி விரைவு படுத்தும். இந்த வண்டிக்கான ரயில் பாதை எத்தகைய வளைவுமின்றி நேராக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இருந்தாலும் ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தின் மீது பதியாமல் மிதந்தபடி ஓடுவது வளைவுகளில் ஆபத்தை விளைவிக்கும். தண்டவாளத்தின் மேல் படாமல் சக்கரங்கள் ஓடுவது என்று சீனாக்காரன் சொல்வது பொய். அதற்கு தண்டவாளங்கள் எதற்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X