உலகின் அதிவேக ரயில் சீனாவில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பறக்கும்| Dinamalar

உலகின் அதிவேக ரயில் சீனாவில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பறக்கும்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (16)
Share
பெய்ஜிங்: மின்காந்த விசையை பயன்படுத்தி மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயிலை சீனா இன்று (ஜூலை 20) அறிமுகப்படுத்தியது.மேக்லெவ் ரயில் எனப்படும் அந்த வகை ரயில்களில் இரண்டு ஜோடி காந்தங்கள் பயன்படுத்தப்படும். ஒன்று ரயில் பெட்டியை தண்டவாளத்திற்கு மேல் உயர்த்தும், மற்றொரு காந்தம் அப்படி உயர்ந்து நிற்கும் ரயிலை மின்காந்த விசையால்

பெய்ஜிங்: மின்காந்த விசையை பயன்படுத்தி மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயிலை சீனா இன்று (ஜூலை 20) அறிமுகப்படுத்தியது.



latest tamil news



மேக்லெவ் ரயில் எனப்படும் அந்த வகை ரயில்களில் இரண்டு ஜோடி காந்தங்கள் பயன்படுத்தப்படும். ஒன்று ரயில் பெட்டியை தண்டவாளத்திற்கு மேல் உயர்த்தும், மற்றொரு காந்தம் அப்படி உயர்ந்து நிற்கும் ரயிலை மின்காந்த விசையால் முன்னோக்கி இயக்கும். சுமார் 20 ஆண்டுகளாகவே சீனா இந்த தொழில்நுட்பத்தை குறைந்த தூரங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. ஷாங்காய் விமான நிலையத்திலிருந்து நகரம் வரையிலான 29 கிலோ மீட்டர் தூரத்தை மேக்லெவ் ரயில் இணைக்கிறது. அது தான் உலகிலேயே அதிவேக வணிக ரயிலாகும். சுமார் 400 கி.மீ., என்ற அதிகப்பட்ச வேகத்தில் செல்லும்.

இந்நிலையில் மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய மற்றொரு ரயிலை தயாரித்து தனது சாதனையை தானே முறியடித்துள்ளது. குயிங்டாவ் எனும் நகரில் சீனாவால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட அந்த ரயில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சீன அரசின் தகவல் அலுவலகம் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


latest tamil news



இந்த ரயிலை மாகாணங்களுக்கிடையே பயன்படுத்த ஆய்வு நடந்து வருகிறது. மாகாணங்களை இணைக்கும் வகையில் பயன்பாட்டுக்கு வந்தால் பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய் இடையேயான 1,300 கிலோ மீட்டரை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும். தற்போது விமான பயண நேரம் இவ்விரு நகரங்களுக்கிடையே 3 மணி நேரமாக உள்ளது. பயன்பாட்டில் உள்ள அதிவேக ரயிலில் 5.5 மணி நேரம் ஆகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X