பொது செய்தி

தமிழ்நாடு

குர்பானி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
உலகில் முதன் முதலில் குர்பானி எப்போது ஆரம்பித்தது?மனித குலத்தின் பெற்றோரான ஆதம் - அலை, ஹவ்வா - அலை தம்பதிக்கு ஒவ்வொரு சூலிலும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறக்கும்.முதல் பிரசவ ஆணுக்கும், இரண்டாம் பிரசவ பெண்ணுக்கும் திருமணம். முதல் பிரசவ பெண்ணுக்கும், இரண்டாம் பிரசவ ஆணுக்கும் திருமணம். இது இறைச் சட்டம். காரணம், வேறு மக்கள் எவரும் உலகில் இல்லை. இப்போது இச்சட்டம் உலகில்
 குர்பானி

உலகில் முதன் முதலில் குர்பானி எப்போது ஆரம்பித்தது?
மனித குலத்தின் பெற்றோரான ஆதம் - அலை, ஹவ்வா - அலை தம்பதிக்கு ஒவ்வொரு சூலிலும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறக்கும்.முதல் பிரசவ ஆணுக்கும், இரண்டாம் பிரசவ பெண்ணுக்கும் திருமணம். முதல் பிரசவ பெண்ணுக்கும், இரண்டாம் பிரசவ ஆணுக்கும் திருமணம்.

இது இறைச் சட்டம். காரணம், வேறு மக்கள் எவரும் உலகில் இல்லை. இப்போது இச்சட்டம் உலகில் எங்குமே இல்லை.முதல் சூலில் ஹாபிலும் -இக்லீமா என்ற பேரழகியும், இரண்டாம் சூலில் ஹாபிலும் - லுபூதா என்ற குறைவான அழகியும் பிறந்தனர்.ஹாபில் இறைச் சட்டத்தை மீறி, தன்னுடன் பிறந்த பேரழகி இக்லீமாவையே மணப்பேன் என்று கூற, ஆதம் - அலை அவர்கள் இதற்கு இறைவனின் சம்மதம் பெற குர்பானி கொடுக்கச் சொல்லி, 'யாருடைய குர்பானியை இறைவன் ஏற்றுக் கொள்கிறானோ அவருக்கே பேரழகி இக்லீமா' என்கிறார்.
ஹாபில் விவசாயி. வேளாண் விவசாயப் பொருட்களை குர்பானி கொடுத்தார். அவர் நல்ல கதிர்களையும், பழங்களையும் தனக்கு வைத்துக் கொண்டு, உமி தொலிகளுடன் கூடிய கதிர்களையும், பழுதான பழங்களையும் இறை குர்பானிக்கு வைத்தார்.ஹாபில், ஆடு மேய்ப்பாளர். நல்ல கொழுத்த ஆட்டையும், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்றவற்றையும் இறை அச்சத்துடன் குர்பானிக்கு வைத்தார்.
வானில் இருந்து புகையில்லாத வெள்ளை நெருப்பு பறந்து வந்து, ஹாபிலுடைய குர்பானியை கரித்துக் கொண்டு போனது. வான் நெருப்புக்கு இரையாக்கப்பட்டவை தான் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே ஹாபிலின் குர்பானியான ஆடும், பாலாடைக்கட்டியும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது; இக்லீமாவை ஹாபில் திருமணம் செய்தார்.
தங்கள் சொந்த உழைப்பின் பொருளை ஒரு பெண்ணுக்காக கொடுப்பதிலிருந்து, திருமணத்தின் போது பெண்ணுக்கு, 'மஹர்' எனும் மணக்கொடை அப்போது தான் முடிவு செய்யப்பட்டது. அன்றிலிருந்து தான் மஹர் உருவானது.'விவசாய பொருட்களையும் குர்பானிக்கு பயன்படுத்தலாம்' என்ற கோட்பாட்டின்படி தமிழர்கள் பொங்கல் தினத்தின் போது பச்சரிசியில் பொங்கல், விளைந்த கரும்பு, புதைந்த மஞ்சள் என இறைவனுக்கு படைத்து 'பொங்கலோ பொங்கல்' என சப்தமிட்டு வழிபடுகின்றனர். இதுவும் தமிழர்களைப் பொறுத்தவரை இறைவனுக்கு படைத்த குர்பானி தான்.
ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானி கொடுக்கும்போது, 'அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்' என்ற தக்பீர் முழக்கத்துடன் உலகம் தழுவிய இஸ்லாம் திருப்பலி எனும் குர்பானி கொடுக்கப்படுகிறது.

சிறப்பிற்குரிய நபி - ஸல் அவர்களின் பிறப்பிற்கு முன், அவர்களின் பாரம்பரியத்தில் முன்னோர் இருவர் பலி இடப்படுவதிலிருந்து தப்பினர். இரு பலிகளில் தப்பிய திரு நபி இதையே, 'நான் இரு பலிகளின் புதல்வன்' என புகழ்ந்தார் பூமான் நபி - ஸல் அவர்கள்.நபி இப்ராஹிம் - அலை அவர்கள் கனவில் தன் மகன் இஸ்மாயில் - அலை அவர்களை, இறைவன் கட்டளைப்படி பலியிட முயன்ற போது அல்லாஹ் ஆட்டை அனுப்பி பலியிட செய்தான். இஸ்மாயில் நபி காப்பாற்றப்பட்டார்.அடுத்து, 'ஆகவே அவ்விருவரும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் வழிபட்டு இப்ராஹிம் தன் மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட முகம் குப்புற கிடத்தினார்' - குர்ஆன் - 37:103.

ஆகவே மகத்தானதொரு பலியை - ஆட்டை அவருக்கு நாம் பகரமாக்கினோம் - குர்ஆன் - 37:107.எனக் கூறிய இறைவன் அன்றொரு நாள் ஹாபிலிடமிருந்து குர்பானியாக பெறப்பட்ட அந்த கொழுத்த செம்மறியாட்டை இஸ்மாயில் - அலை அவர்களுக்கு பகரமாக இறக்கி அறுக்கச் செய்தான். பகரம் கணக்கு சரியானது. இதுவே எனக்கும், உங்களுக்குமான இந்த குர்பானி சட்டம் நாடுகளில் நிறைவேற்றப்படுகிறது.
அந்த நபி இப்ராஹிம் - அலை அவர்களின் வழி வாரிசான அப்துல் முத்தலிப், மக்காவில் வாழ்ந்த செல்வந்தர். இவர் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் நபி இப்ராஹிம் அவர்களின் குழந்தை இஸ்மாயிலின் காலடியில் ஊற்றெடுத்த பாலைவன ஜம்ஜம் ஊற்று, காலப்போக்கில் மறைக்க பட்டு விட்டது.

மக்காவில் ஜம்ஜம் ஊற்றுக்கிணறை கனவு மூலம் கண்டு, கிணறு இருந்த இடத்தை திடமாய் அறிந்து, அக்கிணறு தோண்டிய போது அவர் வேண்டியபடி அவருக்கு 10க்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் பிறந்தனர்.அக்காலத்தில் பெண் குழந்தைகளை வெறுத்து, ஆண் குழந்தைகளை அதிகம் பெற்ற அரபியர், ஆண் குழந்தைகள் வளர்ந்து வாலிபர்களாகிய பின், அவர்களில் ஒருவரை அல்லது குறிப்பிட்ட ஒரு மகனை அவர்கள் வணங்கும் விக்ரஹங்களுக்கு பலியிடுவர்.
இவ்வழக்கப்படி அப்துல் முத்தலிபின் ஆண் மக்கள் வாலிபர்கள் ஆனவுடன், மக்களின் ஒப்புதலோடு பிள்ளைகளின் பெயர்களை எழுதி சீட்டு குலுக்கி எடுத்ததில், கடைசி செல்ல மகன் 'அப்துல்லாஹ்' என்ற பெயர் வந்தது.
அழகிய அப்துல்லாஹ்வைப் பலியிட குடும்பத்தினரும் விரும்பவில்லை; எதிர்ப்பு ஏற்பட்டது. பின்னர் அப்துல்லாஹ்விற்குப் பதில் ஒட்டகங்களைப் பலியிடுவது என்றும் ஏகோபித்து முடிவு செய்தனர்.ஒட்டகங்களின் 10 எண்ணிக்கையை ஒரு திருவுளச் சீட்டிலும், அப்துல்லாஹ்வின் பெயரை மற்றொரு சீட்டிலும் எழுதி குலுக்கினர். பத்து பத்து ஒட்டகங்களாக ஒவ்வொரு சீட்டிலும் கூட்டி எழுத 'அப்துல்லாஹ்' பெயரே வந்து கொண்டிருந்தது. மொத்த குடும்பமும் கவலைப்பட்டது.இறுதியில் '100 ஒட்டகங்கள்' என ஒரு திருவுளச் சீட்டிலும், அப்துல்லாஹ் என இன்னொரு திருவுளச் சீட்டிலும் எழுதிப் போட '100 ஒட்டகங்கள்' சீட்டு எடுக்கப்பட்டது. பலியிடப்பட வேண்டிய அண்ணல் நபி - ஸல் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பிழைத்தார்.
இப்படி இரு பலிகளிலிருந்து தப்பியவர்கள் திரு நபி - ஸல் அவர்கள்.அக்காலத்தில் அரபியர்கள் பலி பிராணிகளை கபாவில் வைத்து அறுத்து அதன் ரத்தத்தை கபாவில் தெளித்தும், அதன் இறைச்சியை கபாவை சுற்றியும் வீசி எறிவர். இது இறைவனுக்கு போய்ச் சேரும் என நம்பினர்.
குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா - பயபக்தி தான் அவனை அடையும் - அல்குர்ஆன் - 22: 37 என்கிற இறை வசனம் இறங்கியது.
'குர்பானி ஒட்டகத்தை அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக நாம் ஆக்கியிருக்கிறோம்... அதன் இடப்பக்க முன் காலைக்கட்டி மற்ற மூன்று கால்களில் நிற்க வைத்தவாறே அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுங்கள்...நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதை - ஒட்டகத்தை உங்களுக்கு வசப்படுத்தி தந்தோம்!
'குர்பானி கொடூரமான ஒரு செயல் அல்ல. காரணம், அது கருணையுள்ள கடவுளின் கட்டளை. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் ஆணை அது. - அல்குர்ஆன் - 108:2குர்பானி கொடுப்பதற்கு முன், அந்த பிராணிக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். கிப்லா - கபாவை நோக்கி அதன் முகத்தை திருப்பி வைக்க வேண்டும்.
காலையோ, காதையோ பிடித்து தரதரவென இழுத்து வரக் கூடாது. கழுத்தைப் பிடித்து மென்மையாக அழைத்து வர வேண்டும்.'முன்பே இதை செய்திருக்கக் கூடாதா? அதற்கு இரண்டு மரணம் கொடுக்க வேணுமா?
'குர்பானி இறைச்சியை மூன்றாக பங்கு வைக்க வேண்டும் என்பது நபி வழியல்ல. தனக்கு ஓரளவிற்கு தேவையானதை எடுத்துக் கொண்டு, மற்ற இறைச்சியை உறவுகளுக்கும், ஏழைகளுக்கும் பங்கு வைத்துக் கொடுக்க வேண்டும்.பிக்கார்ட்ஸ் என்கிற பிரிட்டிஷ் விஞ்ஞானி, 'மனிதன், மாமிசப் பட்சிணியாக வாழவே படைக்கப்பட்டான்' என்கிறார்.
மனிதனுக்கு இரண்டு கோரைப் பல் இருப்பதே, வெந்த அசைவ உணவை மென்று உட்கொள்ளத்தான் என்பதாக பரிணாம வளர்ச்சி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.நீங்கள் குர்பானிக்கு தயாராகி விட்டீர்களா?
ஏ.பி.மூஸல் காழிம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X