சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் காலையில் பணி மாற்றம், மாலையில் பணியிடை நீக்கம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆணையாளராக செண்ணுகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பணி மாறுதல் சென்றுவிட்ட நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புவனேஸ்வரன் என்கின்ற அண்ணாமலை ஆணையாளராக பொறுப்பேற்று தற்போது வரை பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை தமிழக அரசு நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் என்கிற அண்ணாமலையை
 வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் காலையில் பணி மாற்றம், மாலையில் பணியிடை நீக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆணையாளராக செண்ணுகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பணி மாறுதல் சென்றுவிட்ட நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புவனேஸ்வரன் என்கின்ற அண்ணாமலை ஆணையாளராக பொறுப்பேற்று தற்போது வரை பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை தமிழக அரசு நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் என்கிற அண்ணாமலையை மயிலாடுதுறைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு செல்லும் கால்வாய்கள் மற்றும் பாசன நீர் கால்வாய் ஆகியவற்றை தூர்வாரவும், ஏரிகளை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரணிடம் சில ஆவணங்களை கேட்டுள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் சில கோப்புகளில் முழுமையாக தகவலை பதிவு செய்யாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் ஆணையாளரிடம் கேட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் என்கிறஅண்ணாமலையை மாவட்ட ஆட்சியர் அமர் குஸ்வாஹா பணி இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.இச்சம்பவம் நகராட்சி அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X