தனியுரிமை மீறல்!

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
தனியுரிமை மீறல்!பலரது மொபைல் போன் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டுஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவரின் உரையாடலை ஒட்டுக்கேட்பது என்பது அவரது தனியுரிமையை மீறும் செயல்; இதை பா.ஜ., செய்துள்ளது என்றால் அதற்கு தண்டனை கிடைக்க வேண்டும்.அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதிஇது ஒரு அரசா?ஒருபுறம் மக்களை கடன் பெறத் துாண்டுகின்றனர். மறுபுறம் வரிகளை மிரட்டிப் பெற்று
 தனியுரிமை மீறல்!

தனியுரிமை மீறல்!

பலரது மொபைல் போன் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டுஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவரின் உரையாடலை ஒட்டுக்கேட்பது என்பது அவரது தனியுரிமையை மீறும் செயல்; இதை பா.ஜ., செய்துள்ளது என்றால் அதற்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

இது ஒரு அரசா?

ஒருபுறம் மக்களை கடன் பெறத் துாண்டுகின்றனர். மறுபுறம் வரிகளை மிரட்டிப் பெற்று கண்மூடித்தனமாக சம்பாதித்து வருகின்றனர்; இது, மத்திய அரசா அல்லது பழைய ஹிந்தி மொழிப் படங்களில் வரும் வட்டிக்கு கடன் கொடுக்கும் வில்லனா என தெரியவில்லை.

ராகுல்
லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

சேவை பெறவில்லை!

என்.எஸ்.ஓ., குழுமத்தின் 'பெகாசஸ்' மென்பொருளால் மொபைல் போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மஹாராஷ்டிராவில், நான் முதல்வராக பதவி வகித்த நாள் வரை, மாநில அரசு அந்த குழுமத்தின் சேவைகளை பெற்றதில்லை.

தேவேந்திர பட்னவிஸ்

மஹா., முன்னாள் முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X