கூட்டுறவு சட்ட திருத்தம் செல்லும் சில பிரிவுகளுக்கு மட்டும் தடை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக அரசியல் சாசன திருத்த சட்டத்தின் சில பிரிவுகளை நீக்கி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதே நேரத்தில் 'சட்டத் திருத்தம் செல்லும்' என, மூன்று நீதிபதிகளில் இரண்டு நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பு அளித்துள்ளனர்.மத்தியில் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது கூட்டுறவு சங்கங்கள் செயல்பாடுகள்

புதுடில்லி:கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக அரசியல் சாசன திருத்த சட்டத்தின் சில பிரிவுகளை நீக்கி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதே நேரத்தில் 'சட்டத் திருத்தம் செல்லும்' என, மூன்று நீதிபதிகளில் இரண்டு நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பு அளித்துள்ளனர்.

மத்தியில் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது கூட்டுறவு சங்கங்கள் செயல்பாடுகள் தொடர்பாக அரசியல் சாசனத்தில் 97வது சட்ட திருத்தம் செய்யப்பட்டது.


கூட்டுறவு சங்கம்

கடந்த 2011 இறுதி யில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், 2012, பிப்., 15ல் நடைமுறைக்கு வந்தது. 'கூட்டுறவு துறை மாநில அரசுகள் பட்டியலில் உள்ளது. அரசியல் சாசன சட்டத் திருத்தம், மாநிலங்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது' என, குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் சில பகுதிகளை ரத்து செய்து 2013ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதிகள், ஆர்.எப். நாரிமன், கே.எம் ஜோசப், பி.ஆர்.கவாய் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது. இந்த அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:கூட்டுறவு சங்கங்கள் திறமையாக செயல்படுவது தொடர்பான சட்டப் பிரிவுகள் செல்லும். அதே நேரத்தில், கூட்டுறவு சங்கங்களை எப்படி அமைப்பது, எப்படி செயல்பட வேண்டும் என கூறப்படும் சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.


தீர்ப்பு



மூன்று நீதிபதிகளில் நீதிபதி ஜோசப், ஒட்டுமொத்தமாக இந்த சட்டத் திருத்தம் செல்லாது என, மாற்று தீர்ப்பு அளித்துள்ளார்.இருப்பினும் 2:1 என்ற விகிதத்தில் பெரும்பான்மை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கூட்டுறவு என்பது மாநிலப் பட்டியலில் வருவதால், அதன் நிர்வாகம், செயல்பாடுகள் குறித்து சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கே உரிமை உள்ளது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X