சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பறிபோகுமா பதவி?

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பறிபோகுமா பதவி?'வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை நம்பி எதையும் செய்ய முடியவில்லை. அப்படி செய்தால், அவமானப்பட்டு நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்' என, வேதனைப்படுகிறார் உத்தர பிரதேச மாநில பா.ஜ., தலைவர் ஸ்வதேந்திர சிங்.காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூரும் சில மாதங்களுக்கு முன் இப்படித் தான் புலம்பினார். லோக்சபா முன்னாள் சபாநாயகர்

அக்கம் பக்கம்


பறிபோகுமா பதவி?



'வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை நம்பி எதையும் செய்ய முடியவில்லை. அப்படி செய்தால், அவமானப்பட்டு நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்' என, வேதனைப்படுகிறார் உத்தர பிரதேச மாநில பா.ஜ., தலைவர் ஸ்வதேந்திர சிங்.காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூரும் சில மாதங்களுக்கு முன் இப்படித் தான் புலம்பினார். லோக்சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உடல்நிலை குறித்து வாட்ஸ் ஆப்பில் வந்த தகவலை நம்பி, இவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது; பின், இதற்காக சசி தரூர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
தற்போது ஸ்வதேந்திர சிங்கிற்கும் இதுபோன்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. உ.பி., முன்னாள் முதல்வரும், ராஜஸ்தான் முன்னாள் கவர்னருமான கல்யாண் சிங், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை குறித்து ஸ்வதேந்திர சிங்கிற்கு யாரோ வாட்ஸ் ஆப்பில், தவறான தகவலை அனுப்ப, இதை நம்பிய அவர், இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்வதேந்திர சிங்கின் மொபைல் போன் இடைவிடாமல் ஒலிக்கத் துவங்கியது. 'பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், தவறான தகவலை பதிவிடுவது நியாயமா' என, திட்டித் தீர்த்தனர்.
கட்சி மேலிட தலைவர்களின் கண்டிப்புக்கும் ஆளானார். 'இனிமேல் சமூக வலைதளங்கள் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டேன். இதனால், என் பதவியே பறிபோய் விடும் போலிருக்கிறது' என, கவலைப்படுகிறார் ஸ்வதேந்திர சிங்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X