சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கோவில்களில் திருடி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள சிலைகள் விரைவில் மீட்கப்படும்; அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சிலை திருட்டு வழக்குகள் மீதான விசாரணையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.'டவுட்' தனபாலு: சிலைகளை மீட்க வேண்டும் என இப்போது

'டவுட்' தனபாலு

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கோவில்களில் திருடி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள சிலைகள் விரைவில் மீட்கப்படும்; அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சிலை திருட்டு வழக்குகள் மீதான விசாரணையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

'டவுட்' தனபாலு: சிலைகளை மீட்க வேண்டும் என இப்போது கூக்குரலிடும் அந்தந்த ஊர் மக்களும், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினரும், அந்த சிலைகள் கடத்தப்பட்ட போது, எங்கே சென்றிருந்தனரோ என்ற 'டவுட்' எழுகிறது. காலம்காலமாக பக்தியுடன் வழிபட்ட சிலைகள் திருடப்படும் அளவுக்கு கோவில்களை பாதுகாப்பில்லாமலும், பராமரிப்பு இல்லாமலும் வைத்திருந்தது இவர்களின் தவறே!


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
தமிழக அரசு ஆட்சியமைத்து, ஆறு மாதங்கள் கால அவகாசம் தர வேண்டும். அதனால் விமர்சனங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. தவறு செய்தால், ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக தட்டிக் கேட்போம்.

'டவுட்' தனபாலு: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்த, இரண்டாவது நாளிலேயே, அரசு மீது தாக்குதலை, பா.ஜ., தலைவர்கள் துவக்கி விட்டனரே... அதை மறந்து விட்டீர்களோ என்ற 'டவுட்' வருகிறது. ஆறு மாதங்கள் அவகாசம் என சொல்லி, கட்சியினர் மற்றும் பிற கட்சியினர் மத்தியில் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறீர்களோ!


தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்:
'நீட்' விவகாரத்தில், தமிழகத்தை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வை கொண்டு வந்தது, காங்கிரஸ் ஆட்சியில் தான். தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும், நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அதன்பின், ஆட்சிக்கு வந்த, இ.பி.எஸ்., தான், இந்த புண்ணியத்தை கட்டிக்கொண்டார்.

'டவுட்' தனபாலு: அவர் ஆட்சியில் தான், தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லுாரிகள் வந்தன. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வந்தது. இப்படி பல சாதனைகளை படைத்த, இ.பி.எஸ்.,சையா நீங்கள் குறைகூறுகிறீர்கள். 'இமேஜ்' பார்க்காமல் வெளிப்படையாக பேசியவர், செயல்பட்டவர் அவர். அவரை குறை கூறுவது, அரசியல் காரணங்களுக்காகத் தான் என்பதில் 'டவுட்'டே இல்லை!

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-ஜூலை-202116:41:02 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\தி.மு.க., ஆட்சி அமைந்த, இரண்டாவது நாளிலேயே, அரசு மீது தாக்குதலை, பா.ஜ., தலைவர்கள் துவக்கி விட்டனரே... அதை மறந்து விட்டீர்களோ என்ற 'டவுட்' வருகிறது. .......\\ அரசின் செயல்களை கண்காணித்து ஆறு மாதங்களுக்குப் பின் விமர்சிக்கலாம், ஆனால் மந்திரிகளின் "ஒன்றிய அரசு", "தேதி சொன்னோமா" மற்றும் "நீட் தேர்வை கொண்டுவந்தது நாங்கள் இல்லை" போன்ற உளறல்களை உடனே கண்டிப்பதில் என்ன குறை கண்டீர் "ட. த." (டவுட் தனபாலை சுருக்கிவிட்டேன்) அவர்களே
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
21-ஜூலை-202112:54:41 IST Report Abuse
Suppan அந்த காங்கிரஸ் ஆட்சியில் உங்களுக்கும் பங்கு இருந்ததே அதை மறைக்கிறீர்களே இந்த நீட் பற்றிய உருட்டை இததுடன் நிறுத்திக் கொள்கிறீர்களா? காது புளித்துவிட்டது. நீங்கள் எப்படி கஜகர்ணம் போட்டாலும் நீட் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆக வேண்டிய வேலைகளைப் பாருங்கள் மாசு.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஜூலை-202106:17:16 IST Report Abuse
D.Ambujavalli ஆளாளுக்கு விமர்சனம், குற்றம் குறை என்று நீட் தேர்வை வைத்துக்கொண்டு நீங்கள்தான் விளையாடுகிறீர்கள் மாணவர்கள் தங்கள் எதிர்கால நலன்தான் முக்கியம் என்று தேர்வுக்குத் தயாராகி நாலு வருஷங்களாக கல்லூரிகளில் சேர்ந்து தான் வருகிறார்கள் நீங்கள் பாட்டுக்கு ‘குறைகாணும்’ விளையாட்டைத் தொடருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X