சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கனவு கூட காணாதீர்!

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கனவு கூட காணாதீர்!எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் எங்கும் நிறைந்துள்ள லஞ்சம், ஊழல் ஆகியவற்றை அடியோடு களையெடுக்காமல் எந்த மக்கள் நல திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. எனவே அவற்றை ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வாசகர் ஒருவர் இப்பகுதியில் ஆலோசனை வழங்கி இருந்தார்.நம் அரசியல்வாதிகளை பற்றி


கனவு கூட காணாதீர்!எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் எங்கும் நிறைந்துள்ள லஞ்சம், ஊழல் ஆகியவற்றை அடியோடு களையெடுக்காமல் எந்த மக்கள் நல திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. எனவே அவற்றை ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வாசகர் ஒருவர் இப்பகுதியில் ஆலோசனை வழங்கி இருந்தார்.
நம் அரசியல்வாதிகளை பற்றி இன்னமுமா புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்?லஞ்சத்தையும், ஊழலையும் ஒழித்து கட்டி நல்லாட்சி நடத்துவதற்காகவா 360 கோடி ரூபாயை அள்ளி கொடுத்து, ஓர் ஆலோசகரை நியமித்தனர்?ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 2 கோடி ரூபாய் செலவழித்து, 'ஒன்றிணைவோம்' என எதற்காக கூட்டம் நடத்தினர்?கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தல் செலவுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் அள்ளி கொடுத்தது ஏன் என தெரியாதா?தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 20 கோடி ரூபாய்க்கு மேல் வாரி இரைத்தது எதற்காக?வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தனரே... அது லஞ்சத்தை ஒழிப்பதற்காகவா?ஆகையால் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை திராவிட கட்சிகள் ஒழித்து விடும் என கனவு கூட காணாதீர்!


வழக்கை சந்தியுங்கள்!அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மக்கள் பிரதிநிதியாக தேர்வாகி விட்டால், பலர் தங்களை குறுநில மன்னராக நினைத்துக் கொள்கின்றனர்.பார்லிமென்டும், சட்டசபையும் தங்களது சாம்ராஜ்ஜியம் என்பது போல எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நடந்து கொள்கின்றனர்.அவர்கள், மக்கள் சேவையாற்ற குறுகிய காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பணியாளர் தான் என்பதை மறந்து விடுகின்றனர்.சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை விவாதித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடாமல், அங்கு அரசியலுக்காக அடித்துக் கொள்வதும், பொது சொத்துக்களை சேதப்படுத்துவதும் குற்றம்.
எம்.ஜி.ஆர்., முதன்முதலாக முதல்வராகி கவர்னர் உரைக்கு பதிலுரை தந்த போது, 'மக்கள் வரிப்பணத்தில் தான் சட்டசபை நடப்பதால் பொறுப்புடன் செயல்பட வேண்டும்' என்றார்.கடந்த 2015ல், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த போது, நிதியமைச்சரை பட்ஜெட் தாக்கல் செய்ய விடாமல் தடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டணி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கையை கீழே தள்ளி, 'லேப்டாப், கம்ப்யூட்டர், மைக்' உள்ளிட்ட பொருட்களை உடைத்து, கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, கம்யூ., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. எனவே, சட்டசபையில் தாக்குதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என, ஆளுங்கட்சி மனு தாக்கல் செய்தது.ஆனால், வழக்கை ரத்து செய்ய கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை நாடியது கேரள அரசு.அடாவடியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியதே தவறு. இந்நிலையில், மேல்முறையீடு செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'எம்.எல்.ஏ.,க்கள் வரம்பு மீறியதை மன்னிக்கவே முடியாது. மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டதை மன்னிக்க முடியாது. அவர்கள் சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
முந்தைய ஆட்சியில் தொடுக்கப்பட்ட வழக்கை, புதிய ஆட்சியாளர்கள் வாபஸ் பெறும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


இது மக்கள் தொகை வெடிப்பு!கே.நாகலட்சுமி, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்கள் தொகையை கட்டுப்படுத்த, பா.ஜ., அரசு சட்டம் இயற்ற முயற்சிக்கிறது. அரசியலுக்காக இப்படி சட்டங்களை இயற்ற கூடாது' என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கூறியுள்ளார்.அதற்கு அவர் கூறும் காரணம், 'மக்கள் தொகையால், வரும் தேர்தல்களில் தங்களுக்கு பிரச்னை ஏற்படும் என்பதை உணர்ந்ததால், பா.ஜ., இந்த முயற்சியில் இறங்கி உள்ளது' என்கிறார்.இவர் புரிந்து தான் பேசுகிறாரா?உலக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. உலக நிலப்பரப்பில் ஏழாவது இடத்தில் தான், நம் நாடு உள்ளது. நம் நாட்டில் இருப்பது மக்கள் தொகை பெருக்கமல்ல; மக்கள் தொகை வெடிப்பு!
பெருகும் மக்கள் தொகையால், ஒவ்வோர் ஆண்டும் காடுகளை அழித்து விளைநிலங்கள் ஆக்குகிறோம்.இடப் பற்றாக்குறை, நகரமாக்குதல் போன்றவற்றாலும் இயற்கை வளம் அழிகிறது. காடு சார்ந்த விலங்குகளின் பிறப்பிடங்கள் அழிகின்றன; சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.இன்றைய சூழ்நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது நம் அரசின் தலையாய கடமை.அதற்கான வேலைகளில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதை விடுத்து அரசியல் காரணங்களுக்காக இத்திட்டத்தை எதிர்க்க கூடாது.


அரசு அலுவலகத்தில்'சிசிடிவி!'வி.மோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: மாணவியரின் பாதுகாப்பு கருதி, அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளது, மிக நல்ல செய்தி.மகளிருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். பள்ளி மட்டுமின்றி அரசு அலுவலகங்களிலும் பெண்களின் நலன் கருதி, 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும்.பணி நேரத்திற்கு மேல் பெண் ஊழியர்களை அலுவலகத்தில் இருக்குமாறு, உயர் அதிகாரிகள் உத்தரவிடக் கூடாது. இது குறித்து அரசு ஆணை உள்ளது என்றாலும், போதிய விழிப்புணர்வு இல்லை.
'சிசிடிவி' கேமரா பொருத்துவதால், ஊழியர்கள் பணி செய்கின்றனரா, லஞ்சம் வாங்குகின்றனரா, உரிய நேரத்தில் பணிக்கு வருகின்றனரா உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க முடியும்.'சிசிடிவி' கேமராவால் அலுவலகத்தில் கட்டுப்பாடு இருக்கும்; பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
21-ஜூலை-202113:26:12 IST Report Abuse
R VENKATARAMANAN லஞ்சம் என்பது ஒரு சாபக்கேடு . வசதியுள்ளவர்கள் தங்கள் காரியங்கள் நடைபெறவும் அதிலும் தனக்கு தெரிந்தே தவறில் ஈடுபடுபவரும் தாமாகவே லஞ்சம் கொடுக்க முன்வருகிறார்கள் . சிலர் நியாயமானதும் அவசியமானதும் ஆகியவற்றிக்கு லஞ்சம் கொடுக்க வசதியில்லாமல் முழிக்கின்றனர் . அதேபோல் பதவிக்கு வருபவர்களில் நேர்மையானவர்களும் உண்டு .அப்படி நேர்மையானவைகளையும் சிலர் தன்காரியங்கள் நடைபெற ஊக்குவிக்கிறார்கள். மற்றும் கழகத்தை பற்றி சொல்லவே வேண்டாம். பாடிய வாயும் ஆடியகாலும் ஓய்வாகவே இருக்காது. இது தமிழ் நாட்டின் தலை மாற்ற முடியாது. அனுபவித்ததே ஆகவேண்டும். நம் கண்ணை நாமே குத்திக்கொண்டபிறகு பிறரை நொந்து பயன் ஒன்றும் இல்லை.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஜூலை-202106:36:42 IST Report Abuse
D.Ambujavalli சி சி டிவி காமிரா வைத்தால் பெண்களின் நிலை மட்டுமில்லை, லஞ்சம், கோப்பு அழிப்பு எல்லாம் வெளிச்சத்துக்கு வருமே அடிமடியிலேயே கைவைக்கலாமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X