ஊரடங்கு தளர்வு தேவையற்றது கேரளாவுக்கு கோர்ட் எச்சரிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி கடைகளை திறக்க அனுமதி அளித்திருப்பது முற்றிலும் தேவையற்றது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.தொற்று பாதிப்புஇம்மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு

புதுடில்லி:கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி கடைகளை திறக்க அனுமதி அளித்திருப்பது முற்றிலும் தேவையற்றது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.தொற்று பாதிப்புஇம்மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதையடுத்து தொற்று பாதிப்புள்ள பகுதிகள் ஏ பி சி டி என பாதிப்பின் தீவிரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

நாடு முழுதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கும்படி கேரள வர்த்தகர்கள் முதல்வர் பினராயி விஜயனிடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற கேரள அரசு மூன்று நாட்களுக்கு 'ஏ பி சி' பகுதிகளில் மட்டும் காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளித்தது.

தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ள 'டி' பிரிவில் 19ம் தேதி மட்டும் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கேரள அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஊரடங்கு அறிவிப்பால் மக்கள் கடும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பக்ரீத் பண்டிகை காலத்தில் நடக்கும் வியாபாரம் வர்த்தகர்களின் பொருளாதார பிரச்னைக்கு இடைக்கால தீர்வாக அமையும் என கருதுகின்றனர்.ஆலோசனைஎனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பக்ரீத் பண்டிகையின் போது கடைகளை திறக்க அவர்கள் முடிவு செய்தனர். எதிர்கட்சிகளும் இந்த பிரச்னையை பொது வெளியில் விவாதிக்க துவங்கின.

வர்த்தக சங்கத்தினருடன் முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். தொற்று தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவ தோடு கூடுதல் நெறிமுறைகள் விதித்தாலும் அதையும் பின்பற்ற கேரள வர்த்தக சங்கத்தினர் ஒப்புக் கொண்டனர். இதைஅடுத்து மூன்று நாட்களுக்கு கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அவர்கள் உத்தரவிட்டதாவது: தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளிலும் கடைகளை ஒரு நாள் திறக்க உத்தரவிட்டுள்ளது தேவையற்றது. வர்த்தகர்கள் தரும் அழுத்தத்திற்கு அடிபணிந்து மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல் வருத்தம் அளிக்கிறது.

கடைகளை திறப்பதன் வாயிலாக தொற்று பாதிப்பு அதிகரித்து அது குறித்து நீதிமன்றத்தில் முறையிடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X