சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அதிகாரி பெயரில் உதவியாளர் வசூல் வேட்டை!

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அதிகாரி பெயரில் உதவியாளர் வசூல் வேட்டை!அதிகாலையே பெஞ்சில் கூடிய பெரியவர்கள், அன்வர்பாய்க்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்தனர். நன்றி கூறிய அன்வர்பாய், ''கூடுதல் கலெக்டர் இல்லாம, பணிகள் முடங்கி கிடக்குது பா...'' என, விவாதத்துக்குள் நுழைந்தார்.''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மற்றும் கூடுதல் கலெக்டரா


 டீ கடை பெஞ்ச்


அதிகாரி பெயரில் உதவியாளர் வசூல் வேட்டை!அதிகாலையே பெஞ்சில் கூடிய பெரியவர்கள், அன்வர்பாய்க்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்தனர். நன்றி கூறிய அன்வர்பாய், ''கூடுதல் கலெக்டர் இல்லாம, பணிகள் முடங்கி கிடக்குது பா...'' என, விவாதத்துக்குள் நுழைந்தார்.

''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மற்றும் கூடுதல் கலெக்டரா இருந்த பிரியங்கா, சில மாதங்களுக்கு முன்னாடி, சென்னைக்கு மாற்றப்பட்டாங்க... அப்புறமா, புதுசா யாரையும் நியமிக்கலை பா...

''மற்ற மாவட்டங்கள்ல புதுசா திட்ட அலுவலர்களை நியமிச்சும், மதுரைக்கு இன்னும் யாரையும் போடலை... கிராமப்புறங்கள் நிறைஞ்ச மதுரையில, ஊரக வளர்ச்சித் துறை சார்புல நடக்குற 100 நாள் வேலை பணிகள், பல்வேறு திட்ட பணிகள், நிதி ஒதுக்கீடுன்னு பல விஷயங்கள்ல முடிவு எடுக்கிறதுல தாமதம் ஏற்படுது பா...

''அதனால, 'காலியா கிடக்கிற திட்ட அலுவலர் பணியிடத்துக்கு துடிப்பான, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்கணும்'னு, ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் எதிர்பார்த்துட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''கை நீட்டி கத்தை, கத்தையா வாங்கிண்டு, இப்ப கலக்கத்துல இருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''நீலகிரி மாவட்டத்துல பெரும்பாலும் பலரும் கூட்டு பட்டாதான் வச்சிருக்கா... இதனால, இவாளுக்கு தாலுகா ஆபீஸ்கள்ல, அனுபோக சான்றிதழ் தரா ஓய்...

''குன்னுார் தாலுகா ஆபீஸ்ல இந்த சான்றிதழ் கேட்டு போனா, 3,000 ரூபாய் கேக்கறா... அன்னைக்கே சான்றிதழ் வேணும்னா, 10 ஆயிரம் ரூபாய் குடுக்கணும் ஓய்... இது சம்பந்தமா ஒரு விவசாயி, படுகு மொழியில பேசிய ஆடியோ, கலெக்டருக்கு போயிடுத்து... இது சம்பந்தமா விஜாரணை நடக்கறதால, வி.ஏ.ஓ., முதல் தாசில்தார் வரை கலக்கத்துல இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''அதிகாரின்னு சொல்லி வசூல் வேட்டையில இறங்கிட்டாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''யாருவே அது...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளரா, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருத்தர் இருக்காருங்க... இவர், தனியார் தொழிற்சாலைகளுக்கு போய், 'சுகாதாரப் பணிகள் இயக்குனரா புதுசா வந்திருக்கேன்... கொரோனா வழிமுறைகள் பின்பற்றப்படுதான்னு ஆய்வு செய்யப் போறேன்'னு சொல்லி, வசூல் வேட்டையில ஈடுபட்டிருக்காருங்க...

''இது அதிகாரிகளுக்கு தெரிஞ்சு, அவரை கூப்பிட்டு எச்சரிக்கை செய்திருக்காங்க... ஆனாலும், அவரது செயல்பாடுகள் குறையலைங்க... இன்னும் வசூல் வேட்டை நடத்திட்டு தான் இருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.அரட்டை முடிந்து அனைவரும் எழ, ''மதியம் என் வீட்டுல பிரியாணி விருந்துக்கு எல்லாரும் வந்துடுங்க பா... மோகன், நீங்களும் தான்...'' என, நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தபடியே அன்வர்பாய் கிளம்ப, மற்றவர்களும் புறப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tyuu -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202115:57:23 IST Report Abuse
tyuu Tanjore peoples, buisness in Chennai shows clearly.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
21-ஜூலை-202107:30:22 IST Report Abuse
ravi திமுக என்றாலே ஊழல் லஞ்சத்தின் மொத்த உருவம் தானே. ஸ்டாலின் அதிகாரிகளை அழைத்து இப்படித்தான் நடக்கவேண்டும் என்று சொல்லி இருப்பாரோ என்னவோ. இல்லாவிட்டால் அவர் ஏன் இந்த லஞ்ச நாய்களை தடுக்கவில்லை.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஜூலை-202106:30:18 IST Report Abuse
D.Ambujavalli அதெல்லாம் எந்த ஆடியோ, வீடியோவையும் சமாளிக்கத் தெரியாதவர்களா என்ன? வாங்கியதில் கொஞ்சம் கிள்ளிக்கொடுத்து அமைச்சரையே வளைத்துப்போட்டால் கலெக்டருக்குத்தான் மாற்றல் வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X