'கொரோனா, அரசியல் அல்ல; மனிதாபிமான பிரச்னை'

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:''கொரோனா என்பது அரசியல் நெருக்கடி அல்ல; மனிதாபிமான பிரச்னை,'' என, பா.ஜ., -- எம்.பி.,க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. இந்நிலையில் பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.நெருக்கடிஇதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கொரோனா போன்ற ஒரு தொற்றுநோயை உலகம் பல
கொரோனா, அரசியல் அல்லமனிதாபிமான பிரச்னை

புதுடில்லி:''கொரோனா என்பது அரசியல் நெருக்கடி அல்ல; மனிதாபிமான பிரச்னை,'' என, பா.ஜ., -- எம்.பி.,க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. இந்நிலையில் பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.நெருக்கடிஇதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கொரோனா போன்ற ஒரு தொற்றுநோயை உலகம் பல ஆண்டுகளுக்கு பின் சந்திக்கிறது. இது அரசியல் ரீதியிலான நெருக்கடி அல்ல; மனிதாபிமான பிரச்னை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இந்த காலகட்டத்தில் ஏழை மக்கள் எவரும் பசியுடன் துாங்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்காகவே தொற்றுக்கு நடுவிலும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப் படுகின்றன.மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியதே எம்.பி.,க்களான உங்களின் கடமை. இதில் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை கவலை அளிப்பதாக உள்ளது.

காங்., இன்றும் ஆட்சியில் இருப்பதாக நம்புகிறது. பார்லி.,யின் இரு சபைகளிலும் கொரோனா தொடர்பான விவாதங்களை நடத்த தயாராக உள்ளோம். இப்பிரச்னையில் எதிர்க்கட்சிகள் பொறுப்பற்ற முறையில் செயல் படுகின்றன.


குற்றச்சாட்டு

எம்.பி.,க்கள் அனைவரும் தங்களின் தொகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி மக்களை சென்றடைவதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கொரோனாவிற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் கிடைப்பது தொடர்பாக, பார்லி.,யில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை திறனுடன் எதிர்கொள்ள வேண்டும் என, எம்.பி.,க்களிடம் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-202123:39:44 IST Report Abuse
Easwar Kamal பண்றது எல்லாம் பன்னியாச்சு தேர்தல் மூலம் மக்களை நல்ல காவு வாங்கியாச்சு. இப்போ ஒரு புது விளக்கம் வேற. மக்கள் நம்ப தயராக இல்லை. உங்கள் மக்களும், பிஜேபி கட்சியின் மேல் பெரிய பற்று உள்ள மூடர் கூட்டங்கள் வென நமபலம்.
Rate this:
Cancel
21-ஜூலை-202122:20:29 IST Report Abuse
அப்புசாமி இது மனிதாபிமான பிரச்சனைன்னு ரொம்ப நாள் முன்னாடியே தெரிஞ்சி, மக்களுக்கு சொல்லியிருக்கணும். அடா புடா லாக்டவுன் கியா ஜாரஹாஹைன்னு அடிச்சு உடக்கூடாது. நமது ஆணவத்துக்கு குடைத்த அடிதான் இரண்டாம் அலை. நாலு லட்சம் சாவுகள்.
Rate this:
Cancel
21-ஜூலை-202122:15:49 IST Report Abuse
அப்புசாமி இன்னும் வாயால் வடை சுட நல்லா டிரெய்னிங் குடுக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X