இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (3)
Share
ஜூலை 21, 2001விழுப்புரத்தில், 1927 அக்., 1ம் தேதி பிறந்தவர் கணேசன். படிப்பில் ஆர்வமில்லாமல், நாடகங்களில் நடிக்க துவங்கினார். ஒரு நாடகத்தில் சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்தார். அதனால் ஈ.வெ.ரா., இவரை 'சிவாஜி கணேசன்' என குறிப்பிட்டார். அன்று முதல் அப்பெயரிலேயே அழைக்கப்பட்டார்.கடந்த 1952-ல் பராசக்தி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தமிழில் 300க்கும் மேற்பட்ட படங்களில்

இதே நாளில் அன்று


ஜூலை 21, 2001



விழுப்புரத்தில், 1927 அக்., 1ம் தேதி பிறந்தவர் கணேசன். படிப்பில் ஆர்வமில்லாமல், நாடகங்களில் நடிக்க துவங்கினார். ஒரு நாடகத்தில் சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்தார். அதனால் ஈ.வெ.ரா., இவரை 'சிவாஜி கணேசன்' என குறிப்பிட்டார். அன்று முதல் அப்பெயரிலேயே அழைக்கப்பட்டார்.கடந்த 1952-ல் பராசக்தி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தமிழில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.'பத்மஸ்ரீ, பத்மபூஷண், செவாலியே, கலைமாமணி, தாதாசாகேப் பால்கே' உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 1982-ல் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் நயாகரா சிட்டியின் ஒருநாள் மேயராகும் கவுரவம் இவருக்கு கிடைத்தது. 2001 ஜூலை 21-ம் தேதி, தன் 72வது வயதில் இயற்கை எய்தினார்.
'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் காலமான தினம் இன்று!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X