பொது செய்தி

இந்தியா

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு வளையத்தில் டில்லி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:சுதந்திர தினத்தை முன்னிட்டு பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என உளவுத் துறை எச்சரித்து உள்ளதால், டில்லி உச்சக் கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி, டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இந்நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு
 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு வளையத்தில் டில்லி

புதுடில்லி:சுதந்திர தினத்தை முன்னிட்டு பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என உளவுத் துறை எச்சரித்து உள்ளதால், டில்லி உச்சக் கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி, டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இந்நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, ஆக., 5 அன்று, பாக்., பயங்கரவாதிகள் டில்லியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடலாம் என உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.


'ட்ரோன்'

இதையடுத்து ஆக., 15 வரை தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும்படி டில்லி போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமான தாக்குதலை எப்படி சமாளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் போலீசாருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா சூழலை பயன்படுத்தி சமூக விரோதிகள், 'ஸ்லீப்பர் செல்' பயங்கரவாதிகள் ஆகியோர் தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால் விழிப்புடன் இருக்கும்படி டில்லியின் புதிய காவல் துறை கண்காணிப்பாளரான பாலாஜி ஸ்ரீவத்சவா, அனைத்து போலீஸ் உயரதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.


நடவடிக்கை

இதையடுத்து டில்லியின் அனைத்து ஓட்டல்கள், விருந்தினர் விடுதிகள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போர், வீட்டு வேலை செய்வோர் உள்ளிட்டோரின் விபரங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. பழைய வாகன கடைகள், இணைய மையங்கள் ஆகியவற்றிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு நாட்களுக்கு முன் இரவில், டில்லி நகரத்தில் சிறப்பு ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.இதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்டம் நடக்கும் சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X