சில வரி செய்திகள்...: இந்தியா| Dinamalar

சில வரி செய்திகள்...: இந்தியா

Added : ஜூலை 20, 2021
Share
துப்பாக்கியால் வந்த வினைகாசியபாத்: உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டம் சாணாவாலி கிராமத்தை சேர்ந்த ஹிர்டிக் மாலிக் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'வீடியோ'வில் இரு துப்பாக்கிகளை கைகளில் பிடித்தபடி தான் மிகப்பெரிய தாதாவாக விரும்புவதாக கூறினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அவற்றில் ஒன்று பொம்மை

துப்பாக்கியால் வந்த வினை

காசியபாத்: உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டம் சாணாவாலி கிராமத்தை சேர்ந்த ஹிர்டிக் மாலிக் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'வீடியோ'வில் இரு துப்பாக்கிகளை கைகளில் பிடித்தபடி தான் மிகப்பெரிய தாதாவாக விரும்புவதாக கூறினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அவற்றில் ஒன்று பொம்மை துப்பாக்கி.

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

சண்டிகர்: பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள ஷுட்ரானா பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி நான்கு பேர் பலியாயினர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

புதுடில்லி: அண்டை நாடான மியான்மரில் இருந்து அகதிகளாக வந்துள்ள ரோஹிங்கியா பிரிவினர் தொடர்பாக லோக்சபாவில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ரித்திஷ் பாண்டே கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில் ''ரோஹிங்கியா மக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களில் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை நாடு கடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலாகி உள்ளது '' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X