ஊழியர் போன் ஒட்டு கேட்பா? பதிலளிக்க கோகோய் மறுப்பு!| Dinamalar

ஊழியர் போன் ஒட்டு கேட்பா? பதிலளிக்க கோகோய் மறுப்பு!

Added : ஜூலை 20, 2021
Share
புதுடில்லி:பாலியல் புகார் கூறிய பெண் ஊழியரின் மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக பதிலளிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மறுத்துள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி
 ஊழியர் போன் ஒட்டு கேட்பா? பதிலளிக்க கோகோய் மறுப்பு!

புதுடில்லி:பாலியல் புகார் கூறிய பெண் ஊழியரின் மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக பதிலளிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மறுத்துள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் பிரஹலாத் படேல் காங். முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோரின் பெயர்கள் அந்தப் பட்டியலில் உள்ளன.இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.பாலியல் புகாரை கோகோய் மறுத்தார். மேலும் உச்ச நீதிமன்ற குழு நடத்திய விசாரணையில் அது பொய் புகார் என கூறப்பட்டது.

கடந்த 2019ல் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகோயை ராஜ்ய சபா நியமன எம்.பி. யாக மத்திய அரசு நியமித்து உள்ளது.இந்நிலையில் மொபைல் போன் ஒட்டு கேட்பு விவகாரம் வெளிவந்துள்ளது. பாலியல் புகார் கூறிய பெண்ணின் மூன்று போன்கள் அவரது கணவர் உள்ளிட்டோரின் போன்கள் என 11 போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.இது குறித்த கேள்விக்கு பதில் ஏதும் அளிக்க ரஞ்சன் கோகோய் மறுத்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X