இழப்பீடு கோரி எரண்ட்ரோ மனு மணிப்பூர் அரசுக்கு 'நோட்டீஸ்'

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:இழப்பீடு வழங்க கோரி அரசியல் விமர்சகர் லீசோம்பம் எரண்ட்ரோ தாக்கல் செய்த மனு தொடர்பாக மணிப்பூர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் முதல்வர் பைரோன் சிங் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்துள்ளது. விடுதலை'மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவை கொரோனாவை குணப்படுத்துகின்றன' என பா.ஜ. வைச் சேர்ந்த சில தலைவர்கள் கூறியிருந்தனர்.
 இழப்பீடு கோரி எரண்ட்ரோ மனு மணிப்பூர் அரசுக்கு 'நோட்டீஸ்'

புதுடில்லி:இழப்பீடு வழங்க கோரி அரசியல் விமர்சகர் லீசோம்பம் எரண்ட்ரோ தாக்கல் செய்த மனு தொடர்பாக மணிப்பூர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில் முதல்வர் பைரோன் சிங் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்துள்ளது. விடுதலை'மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவை கொரோனாவை குணப்படுத்துகின்றன' என பா.ஜ. வைச் சேர்ந்த சில தலைவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மணிப்பூர் பா.ஜ. தலைவர் ஒருவர் கொரோனாவில் உயிரிழந்தபோது அதை விமர்சித்து மணிப்பூரைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் லீசோம்பம் எரண்ட்ரோ சமூக வலை தளத்தில் பதிவிட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் எரண்ட்ரோவை விடுதலை செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதைஅடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் எரண்ட்ரோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் என் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. அதனால் எனக்கு இழப்பீடு வழங்கும்படி மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.


விசாரணை

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி மணிப்பூர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X