பொது செய்தி

இந்தியா

கமர்ஷியல் தெருவில்பல மாடி 'பார்க்கிங்'

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பெங்களூரு:நகரின் முக்கியமான வர்த்தக பகுதியாக விளங்கும், கமர்ஷியல் தெருவில், பலமாடி வாகன பார்க்கிங் கட்டடம் கட்ட ஏற்பாடு நடக்கிறது. இதற்காக இடம் தேடப்படுகிறது.பெங்களூரின், முக்கிய வர்த்தக பகுதிகளில் ஒன்றான கமர்ஷியல் தெருவுக்கு, தினமும் 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.இங்கு சரியான பார்க்கிங் வசதியில்லாததால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பெங்களூரு மாநகராட்சி, சில

பெங்களூரு:நகரின் முக்கியமான வர்த்தக பகுதியாக விளங்கும், கமர்ஷியல் தெருவில், பலமாடி வாகன பார்க்கிங் கட்டடம் கட்ட ஏற்பாடு நடக்கிறது. இதற்காக இடம் தேடப்படுகிறது.

பெங்களூரின், முக்கிய வர்த்தக பகுதிகளில் ஒன்றான கமர்ஷியல் தெருவுக்கு, தினமும் 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.இங்கு சரியான பார்க்கிங் வசதியில்லாததால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பெங்களூரு மாநகராட்சி, சில ஆண்டுகளுக்கு முன், கமர்ஷியல் தெருவில், பலமாடி பார்க்கிங் கட்டடம் கட்ட திட்டம் வகுத்தது.

ஆனால் தனியாரின் ஒத்துழைப்பு கிடைக்காததால், திட்டத்தை கைவிட்டது. தற்போது, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், பார்க்கிங் கட்டடம் கட்ட, ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் அதிகாரிகள், முடிவு செய்துள்ளனர். திட்ட அறிக்கை தயாராகிறது.கமர்ஷியல் தெருவில், காலியிடம் தேடுவது பெரிய சவாலாக உள்ளது. ரஸ்ஸல் மார்க்கெட் பின்பகுதியில், இடம் உள்ளது.இதை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இடம் முடிவானதும், பணிகள் துவங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X