லாரி கார் மோதல்: நான்கு பேர் பலி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கலபுரகி:ஓட்டுனர் துாக்க களைப்பால், எதிரே வந்த லாரி மீது கார் மோதியதில், நான்கு நண்பர்கள் பரிதாபமாக இறந்தனர்.கலபுரகி மாவட்டம், ஜேவர்கியிலிருந்து, ஐந்து பேர் கொண்ட நண்பர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் காரில் புறப்பட்டனர்.நள்ளிரவு என்பதால் துாக்க களைப்பில் இருந்த ஓட்டுனர், கோடநுார் கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது வேகமாக
லாரி கார் மோதல்: நான்கு பேர் பலி

கலபுரகி:ஓட்டுனர் துாக்க களைப்பால், எதிரே வந்த லாரி மீது கார் மோதியதில், நான்கு நண்பர்கள் பரிதாபமாக இறந்தனர்.

கலபுரகி மாவட்டம், ஜேவர்கியிலிருந்து, ஐந்து பேர் கொண்ட நண்பர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் காரில் புறப்பட்டனர்.நள்ளிரவு என்பதால் துாக்க களைப்பில் இருந்த ஓட்டுனர், கோடநுார் கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதினார்.

மோதிய வேகத்தில் கார் இழுத்து செல்லப்பட்டு, சின்னாபின்னமானது. காரில் இருந்த ராகுல், 25, காசிம், 26, உல்லாஸ், 26, ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இரவு நேரம் என்பதால் உடனடியாக உதவி செய்ய யாரும் வரவில்லை.அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள், காரில் இருந்த மற்ற இருவரை மீட்டு, அருகிலுள்ள உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இறந்தார். மற்றொருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.

தொடர் மழை பெய்து வந்ததால், போலீசாரும் தாமதமாக வந்து விசாரணையை துவக்கினர். கலபுரகி போக்குவரத்து காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X