பொது செய்தி

இந்தியா

பி.எம்.ஆர்.டி.ஏ., -பி.டி.ஏ.,வை ஒன்றாக இணைக்க மாநில அரசு திட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பெங்களூரு:பி.எம்.ஆர்.டி.ஏ., மற்றும் பி.டி.ஏ.,வை ஒன்றாக இணைப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஒரே ஆணையம்பி.எம்.ஆர்.டி.ஏ., எனும் பெங்களூரு மெட்ரோ பாலிடன் மண்டல அபிவிருத்தி மேம்பாட்டு ஆணையம் மற்றும் பி.டி.ஏ., பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே ஆணையமாக மாற்றுவதற்கு, பல காரணங்களை அதிகாரிகள் முன் வைக்கின்றனர். பெங்களூரு மேம்பாட்டு

பெங்களூரு:பி.எம்.ஆர்.டி.ஏ., மற்றும் பி.டி.ஏ.,வை ஒன்றாக இணைப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே ஆணையம்

பி.எம்.ஆர்.டி.ஏ., எனும் பெங்களூரு மெட்ரோ பாலிடன் மண்டல அபிவிருத்தி மேம்பாட்டு ஆணையம் மற்றும் பி.டி.ஏ., பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே ஆணையமாக மாற்றுவதற்கு, பல காரணங்களை அதிகாரிகள் முன் வைக்கின்றனர். பெங்களூரு மேம்பாட்டு திட்டங்களை, ஒரு ஆணையத்தின் கீழ் செயல்படுத்துவதற்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பி.எம்.ஆர்.டி.ஏ., 1986ல் துவக்கப்பட்டது. இந்த ஆணையம், பெங்களூரு மண்டல பகுதிகளில் கட்டமைப்பு திட்டமிடுதல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக துவக்கப் பட்டது.மொத்தமாக, 8,005 சதுர கி.மீ., பரப்பு கொண்ட பெங்களூரு மாவட்டம், புறநகர் மற்றும் ராம்நகர் மாவட்டங்கள் இந்த ஆணையத்தின் கீழ் உள்ளன.

மேலும் ஆணையத்தின் கீழ், பெங்களூரு சர்வதேச விமான நிலையம் திட்ட ஆணையம், ராம்நகர் சென்னபட்டணா மேம்பாட்டு ஆணையம், ெஹாஸ்கோட் ஆணையம், பிடதி ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு திட்டம், தொட்டபல்லாப்பூர் மேம்பாட்டு ஆணையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோக் கூறியதாவது:அனைத்து மேம்பாட்டு திட்டங்களையும், ஆணையங்களையும் ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டுவருவது, திட்டப்பணிகளை எளிமையாக்கும்.பணிச்சுமை திட்டங்களை விரைவில் செயல்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும். பணிச்சுமை குறைவதுடன், மேம்பாட்டு திட்டங்களால் வருவாய் அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பாக பெங்களூரு புறநகர் மேம்பாட்டு துறை, மாநகராட்சி நிர்வாகம் உட்பட நிர்வாகங்களில் கருத்து கேட்பு நடத்தியுள்ளது. இரண்டு ஆணையங்களையும் இணைத்து, ஒரே ஆணையமாக மாற்றுவதே பெரும்பான்மையோர் விருப்பமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X