அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா பல்கலை மூடல் : அமைச்சர் பொன்முடி தகவல்

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை : ''ஜெயலலிதா பல்கலை பெயரளவுக்கு இருப்பதால், அது மூடப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:ஜெயலலிதா பல்கலை நிதி நிலைமை நன்றாக இல்லை. எனவே, அது மூடப்படும்.அண்ணாமலை பல்கலை, தனிப்பட்ட பல்கலையாக செயல்படுகிறது. அதுவும் நிதி இல்லாமல் சிரமப்படுகிறது. எனவே, அண்ணாமலை பல்கலையை, அப்லியேட்டட் பல்கலையாக மாற்ற முடிவு
ஜெயலலிதா பல்கலை.,மூடல் : அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை : ''ஜெயலலிதா பல்கலை பெயரளவுக்கு இருப்பதால், அது மூடப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:ஜெயலலிதா பல்கலை நிதி நிலைமை நன்றாக இல்லை. எனவே, அது மூடப்படும்.
அண்ணாமலை பல்கலை, தனிப்பட்ட பல்கலையாக செயல்படுகிறது. அதுவும் நிதி இல்லாமல் சிரமப்படுகிறது. எனவே, அண்ணாமலை பல்கலையை, அப்லியேட்டட் பல்கலையாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.


latest tamil news



அதில், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள, கல்லுாரிகள் சேர்க்கப்படும். கல்வி வளர்ச்சியை முன்னிட்டு, இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளோம்.
நிதி நிலை, மாணவர்கள் நலன் கருதி, நான்கு மாவட்ட கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலையில் இணைப்பு கல்லுாரிகளாக இணைக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு, விரைவில் வௌியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
26-ஜூலை-202108:42:34 IST Report Abuse
sankar அதிகம் படிக்காத ஜனங்கள்(முப்பது) வீதம் போட்ட வோட்டுகளால் மிகுதி படித்த மக்கள் (எழுபது) மிகவும் சிரமப்பவேண்டியிருக்கு தலைவிதி
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
25-ஜூலை-202105:23:52 IST Report Abuse
meenakshisundaram தமிழர்கள்' சூடான சட்டி இலிருந்து எரியும் அடுப்பில் குதித்து விட்டார்கள்' -தேர்தல் முடிவுக்கு பின்னர் நீதிபதி கட்ஜு சொன்னது நினைவுக்கு வருது.இந்த லக்ஷணத்தில் சட்ட சபையில் 'முக' படம் வேறு திறக்கப்படுகிறது சக்கர நாற்காலியில் ஒய்வு எடுத்துக்கொண்டு சட்ட சபைக்கு வாராது கையெழுத்து மாத்திரம் போட்டு விட்டு .மாதாந்திர காசை மாத்திரம் வாங்கிக்கொண்டு வாழ்ந்த ஒரு உறுப்பினருக்கு இவ்வாறு செய்யலாமா ? இது தான் கஜானா நாயகம் இல்லே பண நாயகம்
Rate this:
Cancel
Ramakrishnan R - kalpakkam,இந்தியா
22-ஜூலை-202122:28:31 IST Report Abuse
Ramakrishnan R அரசியல் வாதிகளின் பெயர்களை பல்கலைக்கழகங்களுக்கு வைக்கக்கூடாது. அண்ணாதுரைக்கும் பொறியியல் துறைக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயரிட்டார்கள்? ஜெயலலிதா என்ன கல்வியாளரா? ஏன் ஜெயலலிதா பல்கலைக்கழகம்? கல்வியை சீரழிக்கும் திருட்டு திராவிட கழகங்கள் ஒழிந்தால்தான் இம்மாதிரியான பைத்தியக்காரத்தனங்கள் ஒழியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X