அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டுவிட்டர்' கணக்கு முடக்கம் டி.ஜி.பி.,யிடம் குஷ்பு புகார்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை:'தன் டுவிட்டர் கணக்கை முடக்கி அட்டூழியம் செய்துள்ள ஹேக்கர்கள், விஷமத்தனமான கருத்துகளை பரப்பி வருகின்றனர்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த நடிகை குஷ்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்துள்ளார்.இது குறித்து , டி.ஜி.பி., சைலேந்திரபாபுவை சந்தித்து குஷ்பு அளித்த புகார் மனு:ஏற்கனவே கையொப்பம் சரிபார்த்தல் தொடர்பாக, என் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தற்போது

சென்னை:'தன் டுவிட்டர் கணக்கை முடக்கி அட்டூழியம் செய்துள்ள ஹேக்கர்கள், விஷமத்தனமான கருத்துகளை பரப்பி வருகின்றனர்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த நடிகை குஷ்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து , டி.ஜி.பி., சைலேந்திரபாபுவை சந்தித்து குஷ்பு அளித்த புகார் மனு:ஏற்கனவே கையொப்பம் சரிபார்த்தல் தொடர்பாக, என் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தற்போது 'ஹேக்' செய்யப்பட்டு, அதில் உள்ள விபரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. ஹேக் செய்யப்பட்டு உள்ள விபரம் வெளியே தெரிய வந்தவுடன், மீண்டும் என் டுவிட்டர் கணக்கு செயல்பாட்டில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.

நான் ஏற்கனவே பதிவு செய்துள்ள விபரங்கள், படங்களும் உள்ளன.ஆனால், என்னால் அந்த டுவிட்டர் கணக்கை பயன்படுத்த முடியவில்லை. என் பெயரை பயன்படுத்தி, சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் எப்போதும் போல, நான் டுவிட்டர் கணக்கை பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


'ராகுலின் டுவிட்டரை முடக்கி என்ன பயன்?'

பின், குஷ்பு அளித்த பேட்டியில், ''காங்கிரசை சேர்ந்த ராகுலின் 'டுவிட்டர்' கணக்கு கூட முடக்கப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்புகிறீர்கள். ராகுலின் டுவிட்டரை முடக்கி என்ன பயன்; சொல்லும்படியாக ஒன்றுமே இருக்கப் போவதில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X