ஆபாச படம் தயாரிப்பு :நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் விசாரணை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவை, மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, 45. இவருக்கும், நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் 2009ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்
 ஆபாச படம் தயாரிப்பு :நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் விசாரணை

புதுடில்லி:ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவை, மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, 45. இவருக்கும், நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் 2009ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


புகார்

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக நடிகை ஷில்பாவும், துணை உரிமையாளராக ராஜ் குந்த்ராவும் இருந்தனர்.கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியதை அடுத்து கிரிக்கெட் போட்டி தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட, ராஜ் குந்த்ராவுக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறி தன்னை சிலர் ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்துவதாக மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் பிப்ரவரியில் போலீசில் புகார் அளித்தார்.இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கிய போலீசார், கனா வசிஷ்ட் என்ற நடிகையை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது ராஜ் குந்த்ராவின் முன்னாள் உதவியாளர் உமேஷ் காமத் பெயரை, கனா வசிஷ்ட் தெரிவித்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் ராஜ் குந்த்ரா ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.விளம்பரத்துறையைச் சேர்ந்த மாடல் அழகிகளுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, மும்பையில் உள்ள ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் அவர்களை வைத்து ராஜ் குந்த்ரா ஆபாச படம் எடுத்துள்ளார்.

அந்த படங்களை 'வீ டிரான்ஸ்பர்' என்ற மென்பொருள் வாயிலாக ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு, அனுப்பி, அங்கிருந்து 'ஹாட் ஷாட்ஸ்' என்ற 'மொபைல் போன்' செயலி யில் பதிவேற்றம் செய்துள்ளார்.இந்த செயலி வாயிலாக கட்டணம் செலுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆபாச படங்களை பார்த்து வருகின்றனர். இதன் வாயிலாக ராஜ் குந்த்ரா பணம் சம்பாதித்துள்ளார். இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


உத்தரவு

இதையடுத்து ராஜ் குந்த்ராவை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர். மும்பை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 23ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.குந்த்ராவின் கூட்டாளி ரயான் தோர்ப் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X