சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பது ஏன்?

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா பெருந்தொற்றுக்கு பின், சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததற்கான காரணத்தை கூறும் நிதி ஆலோசகர் சித்தார்த்தன் சுந்தரம்: கொரோனா என்ற பூதத்தின் பிடியிலிருந்து உலகம் மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நடுத்தர மக்களுக்கு பேரிடியாக இறங்கியிருக்கிறது விலைவாசி உயர்வு. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமின்றி, அனைத்து
 சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பது ஏன்?

கொரோனா பெருந்தொற்றுக்கு பின், சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததற்கான காரணத்தை கூறும் நிதி ஆலோசகர் சித்தார்த்தன் சுந்தரம்:

கொரோனா என்ற பூதத்தின் பிடியிலிருந்து உலகம் மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நடுத்தர மக்களுக்கு பேரிடியாக இறங்கியிருக்கிறது விலைவாசி உயர்வு. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமின்றி, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து, மக்களை திக்குமுக்காடச் செய்து உள்ளது.

சமையல் எண்ணெயின் விலை, 50 சதவீதம் உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் இன்றி, அடுப்பங்கரையில் என்ன தான் நம் பெண்களால் செய்ய முடியும்... ஏனெனில், உலக அளவில் அதிக அளவிலான சமையல் எண்ணெய் பயன்படுத்துவது நம் பெண்களே. எனவே, சமையல் எண்ணெய் விலை உயர்வு, நம் இல்லங்களையும், குறிப்பாக சமையலறைகளையும் வெகுவாக பாதித்துஉள்ளது.இந்த விலை உயர்வுக்கு பல காரணங்கள்.

ஏற்கனவே பொருட்களுக்கான தேவை, கொரோனா நேரத்தில் குறைவாக இருந்ததால், நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிரமத்தை அனுபவித்து வருகின்றன. இப்போது மூலப்பொருட்கள் வந்து சேராததால், போதுமான அளவில் கிடைக்காததால், அவற்றின் விலை உயர்ந்துள்ளது. இது, நுகர்வோர் தலையில் தான் ஏற்றப்பட்டுள்ளது.

அதிக விலை உயர்வை வாடிக்கையாளர்கள் தலையில் ஏற்ற விரும்பாத சில நிறுவனங்கள், விளம்பர செலவையும், வினியோக செலவையும் குறைத்துள்ளன.எனினும், வட மாநில மக்கள் அதிகம் பயன்படுத்தும் கடுகு எண்ணெய், வனஸ்பதி, சோயா, சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்துள்ளன. கடந்த ஓராண்டில் இவற்றின் விலை, 13 சதவீதத்திலிருந்து, 52 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

கடந்த, 20 ஆண்டுகளில் நம் உணவு பழக்க, வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல், சமையல் எண்ணெய் தேவையை அதிகரித்துள்ளது. கடந்த, 1993-94ம் ஆண்டுகளில், தனிநபர் சமையல் எண்ணெய் நுகர்வு, மாதம், 370 கிராமாக இருந்தது. அது இப்போது, 670 கிராமாக உயர்ந்து உள்ளது.இது, தேவை - வினியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தி, தேவையை அதிகரித்து, விலையை உயர்த்தி விட்டது.

நம் நாட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்யில், 50 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனாவால் பாதிப்பு, உலக நாடுகள் அனைத்திலும் உள்ளது. மலேஷியாவில் பாமாயில் தொழிலாளர்கள் பற்றாக்குறை, அர்ஜென்டினாவில் வறட்சி, உக்ரைன் நாட்டின் சூரியகாந்தி விளைச்சல் பாதிப்பு, அதிக அளவில் சமையல் எண்ணெயை சீனா வாங்கத் துவங்கியது போன்ற பல காரணங்களால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.எனவே, உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதும், பயன்படுத்துவதும் தான் இந்த பிரச்னைக்கு தீர்வாக அமையும்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்., - தமிழகம்,இந்தியா
21-ஜூலை-202113:55:08 IST Report Abuse
தமிழ்வேள் நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய் ,கடலை எண்ணெய் போன்றவற்றை பற்றி தவறான பிரச்சாரம் செய்து உள்நாட்டு உற்பத்தி நுகர்வை நாசமாக்கியதன் வினை ...இப்போது இதுவும் கேட்டு அதுவும் கேட்டு தெருவில் நிற்கிறோம் ...அனுபவிக்க வேண்டியதுதான் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X