தமிழகத்தில் விவசாய நிதி உதவி திட்டத்தில் 7.22 லட்சம் போலிகள் பயன்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி:''பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டத்தில் உதவி பெற தகுதியற்ற 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பலன் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட, 3,000 கோடி ரூபாயை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, லோக்சபாவில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில்
தமிழகம், விவசாய நிதி உதவி திட்டம், 7.22 லட்சம் போலிகள்

புதுடில்லி:''பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டத்தில் உதவி பெற தகுதியற்ற 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பலன் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட, 3,000 கோடி ரூபாயை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, லோக்சபாவில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும், 7.22 லட்சம் போலிகள், 340 கோடி ரூபாய் நிதி உதவி பெற்றது தெரியவந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் 6,000 கோடி ரூபாய் வழங்கும் பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டத்தை 2019 பிப்ரவரியில் மத்திய அரசு துவக்கியது.

இதுவரை எட்டு தவணைகளில் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1 லட்சத்து 37 ஆயிரத்து, 192 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒன்பதாவது தவணை நிதி வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே நிதியுதவி பெற முடியும். உயர் வருவாய் பெறும் விவசாயிகள், கோவில் நிலம் வைத்திருப்போர் இந்த நிதி உதவியை பெற முடியாது.

விவசாய குடும்பத்தில் உள்ளவர்களில் யாராவது முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.பி., - எம்,எல்.ஏ.,க்கள், மேயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோரும் இதில் பயன்பெற முடியாது. தகுதியுள்ள விவசாயி களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தேர்வு செய்து, மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

அவர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு நேரடியாக பணம் செலுத்தி வருகிறது. இந் நிலையில் பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதிஉதவி திட்டம் பற்றி லோக்சபாவில் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் பலன் அடையும் நோக்கில் தான், பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப் படுகிறது. எனினும் இந்த திட்டத்தில் குளறுபடிகள் நடந்துள்ளது தெரியவந்துஉள்ளது.

திட்டத்தின் கீழ் நிதிஉதவி பெற தகுதியற்ற 42.16 லட்சம் விவசாயகளின் வங்கி கணக்கில் 2,992 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இதை திரும்ப வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன.அசாமில் 8.35 லட்சம், தமிழகத்தில் 7.22 லட்சம், பஞ்சாபில் 5.62 லட்சம், மஹாராஷ்டிராவில், 4.45 லட்சம், உத்தர பிரதேசத்தில், 2.65 லட்சம், குஜராத்தில் 2.25 லட்சம் பேர் என, தகுதியற்ற விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

அசாமிலிருந்து 554 கோடி ரூபாயும், பஞ்சாபில் இருந்து 437 கோடி ரூபாயும், மஹாராஷ்டிராவில் இருந்து 358 கோடி ரூபாயும், தமிழகத்தில் இருந்து 340 கோடி ரூபாயும், திரும்பப் பெற வேண்டியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் இருந்து 258 கோடி ரூபாயும், குஜராத்தில் இருந்து 220 கோடி ரூபாயும் மீண்டும் திரும்ப பெற வேண்டியுள்ளது.ஆதார், பொது நிதி மேலாண்மை, வருவான வரி கணக்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போது, இந்த முறைகேடு நடந்துள்ளது தெரிந்தது.

தகுதியற்ற விவசாயிகள் பலன் அடைவதை தடுக்க, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.நிதியுதவி பெற தகுதிஉள்ள விவசாயிகளை தேர்வு செய்வதில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு உதவும் இந்த திட்டத்தில் முறைகேடுகளை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


'பேச்சு நடத்த தயார்'

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு 11 சுற்று பேச்சு நடத்தியும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில் லோக்சபாவில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளுடன் பேச, மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. மூன்று சட்டங்கள் பற்றி விவாதித்து, அதில் எந்த பிரிவு பிடிக்கவில்லை என தெரிவித்தால், அதற்கு தீர்வு காண தயார் என, 11 முறை நடத்திய பேச்சில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சட்டங்களை, 'வாபஸ்' பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் பிடிவாதம் பிடிப்பதால் தான், பிரச்னை நீடிக்கிறது. சட்டங்களில் எந்த பிரிவு தங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது என தெரிவித்தால், அது பற்றி பேச அரசு இப்போதும் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
21-ஜூலை-202121:17:15 IST Report Abuse
GANESUN //மத்திய ஆளும்கட்சி ஒழிகன்னும் சொல்லுவோம்..நல திட்டங்கள்ள கொள்ளையும் அடிப்போம்..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-ஜூலை-202118:55:05 IST Report Abuse
sankaseshan தமிழ்நாட்டில் போலிகள் இல்லை என்றால் அதிசயம்
Rate this:
Cancel
RAMESH - CHENNAI,இந்தியா
21-ஜூலை-202117:20:11 IST Report Abuse
RAMESH This is called Digital India. How this happened? Adharcard linked with Bank acct, PAN, LPG, Ration card etc etc. then how
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X