ரூ.23 ஆயிரம் கோடி கூடுதல் செலவு பார்லி., ஒப்புதல் கோரினார் நிர்மலா

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் 23 ஆயிரத்து 675 கோடி ரூபாய் கூடுதலாக செலவுக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்ட்டின் அனுமதியை கோரினார்.லோக்சபாவில் நடந்த கூட்டத்தில் மானியங்களுக்கான துணை கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் விபரம்:நடப்பு நிதியாண்டில் 1.87 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகிறது. இதில், 23 ஆயிரத்து 675
ரூ.23 ஆயிரம் கோடி கூடுதல் செலவு , ஒப்புதல் நிர்மலா

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் 23 ஆயிரத்து 675 கோடி ரூபாய் கூடுதலாக செலவுக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்ட்டின் அனுமதியை கோரினார்.
லோக்சபாவில் நடந்த கூட்டத்தில் மானியங்களுக்கான துணை கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதன் விபரம்:நடப்பு நிதியாண்டில் 1.87 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகிறது. இதில், 23 ஆயிரத்து 675 கோடி ரூபாயை மத்திய அரசு நேரடியாக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மீதமுள்ள தொகை, சேமிப்பு, வருவாய் மற்றும் இதர வழிகளில் திரட்டப்படும்.

இதில் 1.59 லட்சம் கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கான ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகையாக வழங்கப்படும். இதில் மத்திய அரசுக்கு நேரடி செலவு கிடையாது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு 16 ஆயிரத்து 463 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகிறது. மேலும் சுகாதார ஆராய்ச்சி மற்றும் தொற்று தடுப்பு அவசரகால பணிகளுக்கு 526 கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

'ஏர் - இந்தியா' நிறுவனத்தின் கடன்கள் மற்றும் இதர செலவுகளுக்கு 2,050 கோடி ரூபாயும், 2019 - 20ம் ஆண்டுக்கான சர்க்கரை ஆலை உதவி தொகை வழங்க 1,100 கோடி ரூபாயும் தேவைப் படுகிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடிக்கு 1,222 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-202122:22:22 IST Report Abuse
அப்புசாமி போன வருஷம் வங்கிகளுக்கு அவுத்து உட்ட 20 லட்சம் கோடிக்கு அனுமதி பெறப்பட்டதா? எப்புடி செலவாச்சுன்னு கணக்கு உண்டா?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜூலை-202121:47:51 IST Report Abuse
Pugazh V ஒரு லட்சத்து எண்பத்தேழு லட்சம் கோடி செலவு. இதில் வெறும் இருபத்திநாலாயிரம் கோடி தான் ஒன்றிய அரசின் நேரடி செலவு. அதேசமயம், ஜிஎஸ்டி கலெக்ஷன் மட்டுமே மாதாமாதம் ஒரு லட்சம் கோடி. பெட்ரோல் டீசல் வரிகள் மூலமாஇ மூணரை லட்சம் கோடி வருவாய். ஆட்சித்திறனும் நிர்வாக அறிவும் வேண்டும். அதுதான் இல்லை யே. இதில் ஒருவர்... பிரியாணி க்வாட்டர் என்று என்னவோ எழுதறார். இந்தியா வின் எல்லா மாநிலங்களிலும் தான் பிரியாணி க்வாட்டர் இரண்டும் கிடைக்கிறது. என்ன சொல்ல வர்றார்???
Rate this:
Cancel
21-ஜூலை-202114:06:01 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அம்மணி இதில் மோடிக்கு 8400 கோடி க்கு வாங்கிய விமான தொகை அவர் வீட்டிற்கு 50000 கோடி எல்லாம் சேர்ந்துள்ளதா என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X