புதுடில்லி : 'கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ப்பின் போது 'பெகாசஸ்' உளவு தொழில்நுட்ப மென்பொருள் வாயிலாக சிலரது மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது' என, 'தி வயர்' செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் 'பெகாசஸ்' உளவு தொழில்நுட்ப மென்பொருள் உதவியுடன், இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
![]()
|
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்திலும், போன் ஓட்டு கேட்பு விவகாரத்திற்கு பங்கு உள்ளதாக ' தி வயர்' செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி கூறியிருப்பதாவது:
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் இருந்த மதச் சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் ஆட்சி 2019ல் ஏற்பட்ட லோக்சபா தோல்விக்கு பின் தள்ளாட துவங்கியது. இரண்டு கட்சிளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சேர்ந்தனர்.
அப்போது துணை முதல்வர் பரமேஸ்வரா, முதல்வரின் இரண்டு செயலர்கள், முன்னாள் துணை முதல்வர் சித்தராமையா உட்பட பலரது மொபைல் போன் உரையாடல்கள் பெகாசஸ் தொழில்நுட்ப உதவியுடன் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இதை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை.இவ்வாறு அதில் கூறப்படடுள்ளது.குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தபின் எடியூரப்பா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement