அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் மீது அக்கறையில்லை தி.மு.க., மீது ஓ.பி.எஸ்., புகார்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: 'விவசாயிகளை அழைத்து பேசாமல் அ.தி.மு.க.,வுக்கு கண்டனம் தெரிவிப்பது, தி.மு.க.,வுக்கு மக்கள் மீதுள்ள அக்கறைஇன்மையை காட்டுகிறது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:அ.தி.மு.க.,வுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.'எங்கெல்லாம் சாத்தியக்கூறுகள் உள்ளதோ,
மக்கள் ,அக்கறை, தி.மு.க.,  ஓ.பி.எஸ்., புகார்

சென்னை: 'விவசாயிகளை அழைத்து பேசாமல் அ.தி.மு.க.,வுக்கு கண்டனம் தெரிவிப்பது, தி.மு.க.,வுக்கு மக்கள் மீதுள்ள அக்கறைஇன்மையை காட்டுகிறது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
அ.தி.மு.க.,வுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.'எங்கெல்லாம் சாத்தியக்கூறுகள் உள்ளதோ, அவ்விடங்களில் எல்லாம் சாலை ஓரமாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசால் வலியுறுத்தப்படுகிறது' என, தெரிவித்து உள்ளார்.ஆனால், கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். புதிதாக அமைக்கப்பட உள்ள தர்மபுரி - ஓசூர் நான்கு வழிச் சாலையோரம் பதிக்க சொல்கின்றனர்.

அவர்களுடைய பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், சுட்டிக்காட்டிய எனக்கும், அ.தி.மு.க.,வுக்கும் கண்டனம் தெரிவிப்பது, தி.மு.க.,வுக்கு மக்கள் மீதுள்ள அக்கறையின்மையைக் காட்டுகிறது.தொழில் துறை அமைச்சரின் இந்த நிலைப்பாடு, மீண்டும் மீத்தேன், ஸ்டெர்லைட் போன்றவற்றை தி.மு.க., அரசு திரும்ப கொண்டு வருமோ என்ற அச்சத்தை மக்கள் மனங்களில் ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜூலை-202122:27:53 IST Report Abuse
Pugazh V பாஜகவின் பொருளாளர் சிப் சேகர் கூட, மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுவதாகச் சொல்லி விட்டார். இதுகள் என்னடான்னா......
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
21-ஜூலை-202121:38:22 IST Report Abuse
BASKAR TETCHANA காயத்ரி அவர்களே உங்களை விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஓடுங்கள் எங்கோ 5 ஆயிரம் பணம் கொடுக்கிறார்களாம்.
Rate this:
Cancel
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
21-ஜூலை-202117:40:16 IST Report Abuse
Guna Gkrv மிஸ்டர் ஓ பி எஸ் சும்மா கூவம இருங்க நீங்க ஆட்சி பண்ணும் போது ஒன்னும் இப்ப கண்ணு தெரியுதாக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X