இந்தியா

1,000 கிலோ மீன், 200 கிலோ இறால்:ஏனாமில் மருமகனுக்கு மாமனார் 'சீர்'

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுச்சேரி : ஏனாமில், 1,000 கிலோ மீன், 200 கிலோ இறால், 1,000 கிலோ காய்கறிகள் சீர் கொடுத்து மருமகனை, மாமனார் ஆச்சரியப்படுத்திஉள்ளார்.புதுமண தம்பதிக்கு, ஆடி மாதம் சீர் கொடுத்து கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம். அதுபோல, தெலுங்கு பேசும் மக்கள், ஆண்டுதோறும் தெலுங்கு மாதமான, 'ஆஷாதம்' விழாவை கொண்டாடுகின்றனர். இது, பொனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக, ஜூன் - ஜூலை மாதங்களில்
 1,000 கிலோ மீன், 200 கிலோ இறால் ஏனாமில் மருமகனுக்கு மாமனார் 'சீர்'

புதுச்சேரி : ஏனாமில், 1,000 கிலோ மீன், 200 கிலோ இறால், 1,000 கிலோ காய்கறிகள் சீர் கொடுத்து மருமகனை, மாமனார் ஆச்சரியப்படுத்தி
உள்ளார்.
புதுமண தம்பதிக்கு, ஆடி மாதம் சீர் கொடுத்து கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம். அதுபோல, தெலுங்கு பேசும் மக்கள், ஆண்டுதோறும் தெலுங்கு மாதமான, 'ஆஷாதம்' விழாவை கொண்டாடுகின்றனர். இது, பொனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக, ஜூன் - ஜூலை மாதங்களில் கொண்டாடப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள, புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்திலும் ஆஷாதம் விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ஒட்டி, ஏனாமைச் சேர்ந்த பவன்குமார்என்பவருக்கு, ராஜமுந்திரியை சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா, வித்தியாசமான சீர் கொடுத்து அசத்தி உள்ளார்.

இதன்படி, 1,000 கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, 1,000 கிலோ காய்கறிகள், 50 வகை இனிப்புகள், என வண்டி வண்டியாக சீர்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.தன் மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்துக் கொள்வதால் மகிழ்ச்சி அடைந்து, இவ்வளவு சீர் செய்ததாக, பலராம கிருஷ்ணா கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
21-ஜூலை-202113:04:50 IST Report Abuse
raja இப்படியெல்லாம் சீறு கொடுத்தால் மக்களை ஏன் சிறப்பாக வைத்து கொள்ள மாட்டார் மருமகன்... ம்ம்... எனக்கும் தான் ஒரு மாமனார்.... என்னத்த சொல்ல.....
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
21-ஜூலை-202108:01:28 IST Report Abuse
a natanasabapathy இவனை உள்ளே தள்ளவேண்டும் காரோண காலத்தில் அவனவன் ஒருவேளை சாப்பாட்டுக்கு அலையும் பொது இந்த அட்டூழியம் தேவையா
Rate this:
Cancel
21-ஜூலை-202106:16:15 IST Report Abuse
ராஜா இதயெல்லாம் என்ன செஞ்சாங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X