அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கு யார் காரணம்? தி.மு.க.,வுக்கு காங்., பதிலடி!

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நீட் தேர்வு விவகாரத்தில், தமிழகத்தை ஏமாற்றியது யார் என்பது, மக்களுக்கு தெரியும். நீட் தேர்வை கொண்டு வந்தது, காங்., ஆட்சியில் தான். தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்த போதும், நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அதன்பின் வந்த, பழனிசாமி., தான், இந்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்!' இப்படி நீட் தேர்வுக்கு, காங்கிரஸ்
 'நீட்' தேர்வுக்கு யார் காரணம்?  தி.மு.க.,வுக்கு காங்., பதிலடி!

நீட் தேர்வு விவகாரத்தில், தமிழகத்தை ஏமாற்றியது யார் என்பது, மக்களுக்கு தெரியும். நீட் தேர்வை கொண்டு வந்தது, காங்., ஆட்சியில் தான். தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்த போதும், நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அதன்பின் வந்த, பழனிசாமி., தான், இந்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்!'

இப்படி நீட் தேர்வுக்கு, காங்கிரஸ் மற்றும் பழனிசாமி., தான் காரணம் என்பதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.இது குறித்து, தமிழக காங்., செய்தி தொடர்பாளர் சந்திரசேகரன் கூறியதாவது:இந்தியா முழுதும் மருத்துவ படிப்புக்கு, ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றே, நீட் தேர்வை, அப்போதைய காங்., கூட்டணி அரசு கொண்டு வர முயன்றது.

ஆனால், குறிப்பிட்ட மாநிலங்கள், தகுந்த காரணங்களைச் சொல்லி, விலக்குக் கோரினால், சில காலத்திற்கு விலக்கு அளிக்கலாம் என்ற ஷரத்தும், காங்., அரசு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்து தான், அப்போதைய தி.மு.க., அரசும், அடுத்து வந்த ஜெயலலிதாவும் கூட, நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றனர்.

நீட் தேர்வை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கட்டாயமாக அமல்படுத்தியது, பா.ஜ., அரசு தான். அவர்கள் சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்டும், பழனிசாமி., முதல்வரானதும், நீட் தேர்வை கொண்டு வந்து விட்டனர். இது தான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.


அ.தி.மு.க., சொல்வது என்ன?

அ.தி.மு.க., தரப்பில், முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை ரத்து செய்யும் அறிவிப்பில் தான், என் முதல் கையெழுத்து இருக்கும்' என சொன்னாரே, தற்போதைய முதல்வர் ஸ்டாலின்; அதை ஏன், செய்யவில்லை? செய்ய முடியாது என தெரிந்து விட்டது. அதனால் தான், மாணவர்களையும், பெற்றோரையும் ஏமாற்றுவதற்காக, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி போட்டு, கருத்து வாங்கினர்.

ரத்து செய்வதாக சொன்னவர்கள், தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய, சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர். நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றதும், அரசு பள்ளி மாணவர்களும், ஏழை மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்து, கிராம மாணவர்களின் கனவை, நாங்கள் நினைவாக்கினோம். அதை தி.மு.க., 10.5 சதவீதமாக உயர்த்திக் கொடுக்கலாம். அதை விடுத்து, மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, தி.மு.க., அரசு, 'டிராமா' போடுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
-- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
21-ஜூலை-202102:27:34 IST Report Abuse
BASKAR TETCHANA மீசையே இல்லாம இருக்கும் ஒருவனுக்கு எப்படி மண் படும். இப்படி சொல்லலாம் மண்டை இருந்தும் எதை எப்படி செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் என்பதற்கு மூளை வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X