பொது செய்தி

தமிழ்நாடு

வங்க கடலில் உருவாகுது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை:வடமேற்கு வங்கக்கடலில், வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அம்மையம் வெளியிட்ட அறிக்கை:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.மற்ற

சென்னை:வடமேற்கு வங்கக்கடலில், வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அம்மையம் வெளியிட்ட அறிக்கை:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.மற்ற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் பரவலாக வறண்ட வானிலையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புகள் தென்படுகின்றன.தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.

எனவே, இப்பகுதிகளுக்கு அடுத்த சில நாட்களுக்கு செல்ல வேண்டாம் என, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X