சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூறைக் காற்றுடன் மழை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும், சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.அசாம் மாநிலம், கவுகாத்தியில் இருந்து 61

சென்னை:சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும், சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

அசாம் மாநிலம், கவுகாத்தியில் இருந்து 61 பயணியருடன் வந்த ஏர் ஏசியா விமானம், நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்தது. அப்போது சூறைக் லகாற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், விமானம் தரையிறங்க முடியாமல் வானில் சிறிது நேரம் வட்டம் அடித்தது.

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர். பின் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு பெங்களூரில் இருந்து அந்த விமானம் சென்னை திரும்பியது.இதேபோல, சென்னையில் இருந்து டில்லி, பெங்களூரு செல்ல வேண்டிய இரண்டு பயணியர் விமானங்கள், ஐதராபாத், பெங்களூரு, ஹாங்காங் செல்ல வேண்டிய மூன்று சரக்கு விமானங்கள், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X