அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொழில்புரிய உகந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவதே லட்சியம்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை : ''தெற்காசியாவிலேயே தொழில் புரிய உகந்த மாநிலமாக, தமிழகத்தை உயர்த்துவதே எங்கள் அரசின் லட்சியம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக தொழில் துறை சார்பில் நடந்த, 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' விழாவில், அவர் பேசியதாவது:தமிழகம் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். கொரோனா தொற்று
 தெற்காசியா, தொழில்புரிய உகந்த மாநிலம், தமிழகம் ,  லட்சியம்: ஸ்டாலின்

சென்னை : ''தெற்காசியாவிலேயே தொழில் புரிய உகந்த மாநிலமாக, தமிழகத்தை உயர்த்துவதே எங்கள் அரசின் லட்சியம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக தொழில் துறை சார்பில் நடந்த, 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' விழாவில், அவர் பேசியதாவது:தமிழகம் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். கொரோனா தொற்று தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எதையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டதாக, மாநிலத்தை மாற்றி இருக்கிறோம்.




புத்துணர்வு



கொரோனா தாக்கத்தின்போது, மருத்துவ நெருக்கடியை மட்டுமல்ல, நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டோம். அரசு சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்க கோரிக்கை விடுத்தேன். இரண்டு மாதங்களில் 489.78 கோடி ரூபாய் நிதி திரண்டுள்ளது. நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி.'தமிழகத்தில் தொழில் துவங்க வாருங்கள்' என, தமிழக அரசு அழைப்பதை தாண்டி, தமிழக தொழில் அதிபர்கள் மற்ற நிறுவனங்களுக்கு, அழைப்பு விடுக்க வேண்டும்.
உலக அளவில் உற்பத்தி துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது.

கருணாநிதி அரசில், தொழில் துறை அமைச்சராக நான் இருந்தபோது, உலக அளவில் மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் தங்கள் முதலீடுகளை மேற்கொண்டன. அன்று முதலீடுகள் மேற்கொள்ள, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கியது. தற்போது, தெற்காசியாவிலேயே தொழில்புரிய உகந்த மாநிலமாக, தமிழகத்தை உயர்த்துவதே, எங்கள் அரசின் லட்சியம். வரும் 2030க்குள், 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக, தமிழகத்தை உருவாக்குவதே அரசின் குறிக்கோள்.
அந்த இலக்கை நோக்கி பயணிக்க, உங்கள் அனைவர் ஒத்துழைப்பும் தேவை.


ஒத்துழைப்பு



முதலீட்டாளர்கள் தொழில் துவங்க தேவையான அனைத்து அனுமதிகளையும், உடனுக்குடன் பெற்று, திட்டத்தை விரைவாக நிறுவ, மேம்படுத்தப்பட்ட ஒற்றை சாளர இணையதளம் '2.0'வை துவக்கி வைத்துள்ளேன். இதில், கூடுதலாக 210 சேவைகளை, அடுத்த ஆண்டு மார்ச்சிற்குள் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். புதிய முதலீடுகளை பெருமளவு ஈர்க்க வேண்டும்என்பது தான், எங்கள் முதல் இலக்கு. அதற்கு உலகத்தரம் வாய்ந்த, உள்கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

ஏற்றுமதி கொள்கை, மருந்து பொருட்கள் மற்றும் உயிரிநுட்ப கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க ஒரு கொள்கை என, பல கொள்கைகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் உயர்கல்வி, சமூக மேம்பாடு, தொழில் வளர்ச்சி ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் சீராக வளர வேண்டும் என்பதே அரசின் இலக்கு. இந்த வளர்ச்சிக்கு, தமிழக தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniam - Prague,செக் குடியரசு
23-ஜூலை-202111:44:13 IST Report Abuse
Subramaniam இந்திய சந்தையில் மற்றைய மாநில நிறுவனங்களுடன் போட்டியிடும் தமிழக நிறுவனங்களின் தொழில் திறனை மேம்படுத்த தொழில்நுட்ப யந்திர நவீனப்படுத்தலில் தமிழக அரசு முதலீடு செய்தல் வேண்டும்.
Rate this:
Cancel
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூலை-202121:53:10 IST Report Abuse
Murugesan இப்ப மட்டும் அதானி கார்ப்பரேட் இல்லையா ,எதிர்கட்சியாக இருந்தபோது கசந்தது ,மக்களை தூண்டிவிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்தார்கள் ,கூட கும்மியடித்த உண்டிக்குளிக்கிகள் இப்பவெல்லாம் சாதம் சாப்பிடுவதில்லை மானங்கெட்ட சுயநலவாதிகள்
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
21-ஜூலை-202121:41:05 IST Report Abuse
GANESUN //இவர்கள் எல்லாம் வேறு மாநிலத்திற்கு குடிபெயரலாமே??// புகளு சார்..வெரும் "சன்" டிவில வர்றத மட்டும் பாத்துட்டு, பிறந்த வளர்ந்த இந்திய தேசத்துக்கே எதிரான எண்ணம் கொண்டவர்கள் பங்காளிங்க நாட்டுக்கே போயிடலாமே..இததான் பல வருஷங்களா சொல்லிட்டிருக்கோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X